பெரம்பலூர் மாவட்டத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு : 6 கிராமத்தினர் மனு

schedule
2018-01-10 | 19:50h
update
2026-06-28 | 03:21h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Jallikattu: 6 villagers petition for the Pongal festival in Perambalur district

பெரம்பலூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிகோரி பல்வேறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபோன்ற ஜல்லிக்கட்டு விழாவினை பாதுகாப்பாகவும், அரசு விதிகளுக்குட்பட்டும் நடத்துவது குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடானன ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் நேற்று நடைபெற்றது.

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசலூர், வி.களத்தூர், பூலாம்பாடி, அன்னமங்கலம், விசுவகுடி மற்றும் பெரம்பலூர் ஆகிய ஊர்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு மனுக்கள் வரப்பெற்றுள்ளது. இந்தப்பகுதிகளில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பாதுகாப்பான முறையிலும், அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டும் நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இரண்டு குழுக்கள் அமைக்கப்படவுள்ளது.

அரசுத்துறை அலுவலர்களை உள்ளடக்கிய ஆய்வுக்குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது. இக்குழுவானது வருவாய்க் கோட்டாட்சியர் தலைமையில் இயங்கும். இக்குழுவானது மாவட்ட மாவட்ட வன அலுவலர், துணை காவல் கண்காணிப்பாளர், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர், சுகாதாரத்துறை துணை இயக்குநர், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மற்றும் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஆகியோரை உள்ளடக்கியதாக இருக்கும்.

மேலும், தன்னார்வ அமைப்பினர், விலங்குகள் நல ஆர்வலர், அரசு உயர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற ஒருவர் மற்றும் விவசாயிகளை உள்டக்கிய தணிக்கை குழு அமைக்கப்படவுள்ளது.

இந்த இரண்டு குழுக்களும் கோரிக்கை விடுத்துள்ள கிராமங்களுக்கு நேரடியாகச்சென்று கள ஆய்வு மேற்கொண்டு அரசு விதிகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு நடத்த வாய்ப்புகள் இருப்பின் அது தொடர்பான அறிக்கையினை மாவட்ட ஆட்சியருக்கு சமர்ப்பிக்கும், அதன் அடிப்படையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என ஆட்சியர் சாந்தா தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
28.06.2026 - 03:22:07
Privacy-Data & cookie usage: