பெரம்பலூர் அருகே உள்ள அன்னமங்கலம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு

schedule
2017-02-25 | 12:20h
update
2026-06-11 | 13:23h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

jallikattu in annamankalam village near by perambalur

பெரம்பலூர் அருகே உள்ள அன்னமங்கலம் கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு இன்று பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலம் கிராமத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, கடலூர், விழுப்புரம் சேலம் மாவட்டங்களில் இருந்து சுமார் 350க்கும் மேற்பட்ட அலங்கரிக்கப்ட்ட காளைகள் கலந்து கொண்டன , 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் 100 நூறு பேராக மூன்று அணியாக கலந்து கொண்டனர்.

அரசு அனுமதியுடன் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டிற்கு வெளியூரில் இருந்த வருகை புரிந்த மாடு பிடி வீரர்கள் மற்றும உறவினர்களுக்கு வடை, பாயசம் மற்றும் கறி விருந்தும் அளித்தனர். காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே விளையாட்டில் கலந்து கொள்ள அனுமதிக்கப்ட்டனர்.

Advertisement

சி.எஸ்.ஐ தேவாலயம் அருகே அமைக்கப்பட்டிருந்த திடலில் வாடி வாசல் அமைக்கப்பட்டு காலை 9மணி முதலலே காளைகள் களத்தில் அவிழ்த்து விடப்பட்டது. அங்கு திரளாக திரண்டு இருந்த மாடுபிடிவீரர்கள் காளை அடக்கினர். சில காளைகள் மாடுபிடி வீரர்களுக்கு கையில் சிக்காமலேயே மிரட்டி சென்றது. ஒரு சில காளைகளை அடக்க முயன்ற போது காளைகள் முட்டிதிலும், தூக்கி வீசியதிலும் சிலர் சிறிய அளவில் காயமடைந்தனர்.

முதலுதவி செய்யப்பட்டு அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டு உள்ளனர். காளைகள் அடக்கியவர்களுக்கு அண்டா, குண்டா, வெள்ளி பொருட்கள், கட்டில், மெத்தை, பிரோ, உள்ளிட்ட ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட அனைத்து மாடுகளுக்கும் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்ட்டது. இந்த ஜல்லிக்கட்டை காண ஆயிரக்கணக்கானோர் விடுமுறை நாள் என்பதால் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டு கண்டு களித்தனர். ஜல்லக்கட்டு நடந்ததால் அன்னமங்கலம் கிராமமே திருவிழா கோலம் பூண்டிருந்தது. பாதுகாப்பு ஒன்றையே மட்டும் கருத்தில் கொண்டு மேடை உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாதால் பார்வையாளர்கள் காளையர்கள் காளைகளை அடக்குவதும், மிரட்டும் காளைகளை கண்டு காளையர்கள் கண்டு களிக்க முடியாததால் ஆயிரக்கணக்கானோர் அவதிப்பட்டு பாதி நிகழ்ச்சியுடன் வெயிலின் தாக்கத்தால் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். காவல் துறை, வருவாய்துறை, கால்நடைத்துறையினர் தொடர்ந்து அயராமல் பாதுகாப்பு பணியில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.06.2026 - 13:24:04
Privacy-Data & cookie usage: