பெரம்பலூர் அருகே தடைக்கு பிறகு முதன்முறையாக ஜல்லிக்கட்டு !

schedule
2017-01-26 | 06:58h
update
2026-09-08 | 08:01h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Jallikattu near in perambalur

பெரம்பலூர் மாவட்டத்தில் தடைக்கு பிறகு அருகே முதல் முறையாக ஜல்லிக்கட்டு நடைபெற்றது. கலந்து கொண்ட ஜல்லிக்கட்டு காளை மரத்தில் மோதி உயிரிழந்தது.

தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு இன்று பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே அரசலூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு வெகுசிறப்பாக நடைபெற்றது. பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, கடலூர், விழுப்புரம் சேலம் மாவட்டங்களில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட அலங்கரிக்கப்ட்ட காளைகள் கலந்து கொண்டன , காளை மாடுகள் கலந்து கொண்டனர். அரசு அனுமதியுடன் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டிற்கு வெளியூரில் இருந்த வருகை புரிந்த மாடு பிடி வீரர்கள் மற்றும உறவினர்களுக்க வடை, பாயசம் மற்றும் கறி விருந்தும் அளித்தனர். காளைகள், 150க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்ட பிறகே அனுமதிக்கப்ட்டனர்.

Advertisement

மாரியம்மன் கோவில் திடலில் வாடி வாசல் அமைக்கப்பட்டு காளைகள் களத்தில் அவிழ்த்து விடப்பட்டது. அங்கு திரளாக திரண்டு இருந்த மாடுபிடிவீரர்கள் காளை அடக்கினர். சில காளைகள் மாடுபிடி வீரர்களுக்கு கையில் சிக்காமலேயே மிரட்டி சென்றது. ஒரு சில காளைகளை அடக்க முயன்ற போது காளைகள் முட்டிதிலும், தூக்கி வீசியதிலும் 5 பேர் காயமடைந்தனர். முதலுதவி செய்யப்பட்டு அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்து ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டு உள்ளனர். காளைகள் அடக்கியவர்களுக்கு அண்டா, குண்டா, வெள்ளி அரைஞாண் கொடி, ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட அனைத்து மாடுகளுக்கும் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்ட்டது. இந்த ஜல்லிக்கட்டை காண ஆயிரக்கணக்கானோர் விடுமுறை நாள் என்பதால் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டனர். அவ்வப்போது மழையும் பெய்தே கொண்டே இருந்தையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த ஜல்லிக்கட்டை பொதுமக்கள் குடை பிடித்தப்படி கண்டு களித்தனர். ஜல்லக்கட்டு நடந்ததால் அரசலூர் கிராமமே திருவிழா கோலம் பூண்டிருந்தது.

அன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்த செபாஸ்டியன் என்பவரது காளை மாடு ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட பிறகு வெளியேறியபோது மரத்தில் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.09.2026 - 08:01:22
Privacy-Data & cookie usage: