ஜல்லிக்கட்டு : பெரம்பலூரில் சுமார் 3 ஆயிரம் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

schedule
2017-01-18 | 06:47h
update
2026-09-21 | 18:16h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Jallikattu: nearly 3 thousand perambalur students boycotted classes in protest

பெரம்பலூரில் ஜல்லிக்கட்டை ஆதரித்தும், பீட்டாவை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும், தனியார் கலை, அறிவியல் , பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் இன்று ஜல்லிகட்டை ஆதரித்து காலை வகுப்புகளை புறக்கணித்துவிட்டு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த மாணவர்கள் சுமார் 3 ஆயிரம் பேர், ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரியும், பீட்டா அமைப்பை இந்தியாவில் தடை செய்ய வலியுறுத்தியும் முழங்களை கடுமையாக எழுப்பினர். காலை 10 மணி முதலே நடந்து வரும் போராட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட போலீசார் அசம்பாவிதம் ஏதும் நடக்காத வகையில் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், இதே போன்று வேப்பந்தட்டை அரசு கல்லூரி மாணவர்களும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.09.2026 - 18:16:46
Privacy-Data & cookie usage: