அனைத்து வட்டாரங்களிலும் நாளை ஜமாபந்தி  ; பெரம்பலூர் கலெக்டர் கலெக்டர்  தகவல்!

schedule
2023-05-18 | 07:06h
update
2023-05-18 | 07:06h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com
Jamabanthi tomorrow in all localities; Perambalur Collector Information!

பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் 1432-ஆம் பசலிக்கான ஜாமாபந்தி அனைத்து வட்டடங்களிலும் 19.05.2023 முற்பகல் 09.00 மணியளவில் தொடங்கி நடைபெற உள்ளது. வேப்பந்தட்டை வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் பசும்பலூர் குறுவட்ட பகுதிக்கு உட்பட்ட பெரிய வடகரை, நூத்தப்பூர் (தெற்கு), நூத்தப்பூர் (வடக்கு), பில்லாங்குளம் மற்றும் கை.களத்தூர் (மேற்கு) ஆகிய கிராமங்களுக்கு நடைபெற உள்ளது.

பெரம்பலூர் வட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் பெரம்பலூர் குறுவட்ட பகுதிகளுக்கு துறைமங்கலம், பெரம்பலூர் (தெற்கு), பெரம்பலூர் (வடக்கு), அரணாரை (வடக்கு) மற்றும் அரணாரை (தெற்கு) ஆகிய கிராமங்களுக்கு நடைபெற உள்ளது.குன்னம் வட்டத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் அலுவலர் தலைமையில் கீழப்புலியூர் குறுவட்ட பகுதிக்கு உட்பட்ட நன்னை (மேற்கு), பெருமத்தூர் (வடக்கு), பெருமத்தூர் (தெற்கு), சிறுமத்தூர் மற்றும் கீழப்புலியூர் (வடக்கு) ஆகிய கிராமங்களுக்கு நடைபெற உள்ளது. ஆலத்தூர் வட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் தலைமையில் கொளக்காநத்தம் குறுவட்ட பகுதிக்கு உட்பட்ட சாத்தனூர், சிறுகன்பூர் (கிழக்கு), சிறுகன்பூர் (மேற்கு), வரகுபாடி மற்றும் காரை (கிழக்கு) ஆகிய கிராமங்களுக்கு நடைபெற உள்ளது, என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.08.2026 - 04:00:09
Privacy-Data & cookie usage: