ஜமாபந்தி; இணையதளம் வாயிலாக மனு : பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா அறிவிப்பு!

schedule
2020-06-27 | 12:56h
update
2020-06-27 | 12:56h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Jamapanti; Petition through Website: Perambalur Collector V. Santha Announced!

பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல்:

கோவிட் 19 நோய்த்தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் 30.06.2020 வரை குற்றவியல் நடைமுறை சட்டம் 144ன் கீழ் தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அரசாணை நிலை எண்.306, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை(வ.நி3(2)) துறை, நாள்-17.06.2020 படி பெரம்பலூர் மாவட்டத்தில் 1429 ஆம் பசலி(2019 – 2020)க்கான ஜமாபந்தி மனுக்கள் பொதுமக்களிடமிருந்து நேரடியாக பெறப்படமாட்டாது.

Advertisement

பொதுமக்கள் வருவாய் தீர்வாய(ஜமாபந்தி) தொடர்பான கோரிக்கை மனுக்களை உரிய ஆவணங்களுடன் தாங்களே gdp.tn.gov.in/jamabandhi என்ற இணைய தள முகவரி வாயிலாகவோ அல்லது தங்கள் கிராமத்திற்கு அருகிலுள்ள ஆன்லைன் மற்றும் இ-சேவை மையங்கள் மூலமாக 29.06.2020 முதல் 15.07.2020 வரையுள்ள தேதிகளில் பதிவேற்றம் செய்து அதற்குரிய ஒப்புதல் ரசீதினை தவறாது பெற்றுக்கொள்ளலாம் எனவும், பதிவேற்றம் செய்யப்படும் மனுக்கள் மீது உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு மனுதாரர்களுக்கு பதில் வழங்கப்படும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும், கொரோனா நோய் பரவலை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் ஆன்லைன் மற்றும் இ-சேவை மையங்களில் மனுக்கள் அளிக்கும்போது தவறாது முக கவசம் அணியவும், சமூக இடைவெளியினை பின்பற்றவும் தெரிவிக்கப்படுகிறது, என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.07.2026 - 12:11:03
Privacy-Data & cookie usage: