வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவிலில் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி சிறப்பு யாக பூஜை.

schedule
2016-10-26 | 17:10h
update
2026-09-16 | 11:50h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Jayalalithaa had to complete a special ritual in the temple heal valikantapuram valisvarar.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வாலிகண்டபுரம் கிராமத்தில் உள்ள வாலீஸ்வரர் கோவிலில் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி சிறப்பு யாக பூஜை மாவட்ட அ.தி.மு.க சார்பில் நேற்று காலை நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வாலிகண்டபுரம் வாலாம்பிகை உடனுறை வாலீஸ்வரர் திருக்கோவிலில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி மாவட்ட அ.தி.மு.க சார்பில் சிவாச்சாரியார்களை கொண்டு சிறப்பு யாக பூஜை நடைபெற்றது.

Advertisement

அப்போது விக்னேஷ்வர பூஜை, மஹா சங்கல்பம் கலச ஆவாஹனம் அர்ச்சனை, ருத்ர பாராயணம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், அய்யங்கர ம்ருத்யுஞ்ஜெய ஹோமம், 108 மூலிகைகளால் தன்வந்திரி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு அபிஷேகம் மற்றும் பூர்ணாஹீதி மஹாதீபாராதணைகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க மாவட்ட செயலாளரும் குன்னம் தொகுதி எம்.எல்ஏவுமான ஆர்.டி.இராமச்சந்திரன், பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ தமிழ்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் வேப்பந்தட்டை சிவப்பிரகாசம், ஆலத்தூர் கர்ணன், வேப்பூர் கிருஷ்ணசாமி, முன்னாள் எம்.எல்.ஏ பூவை செழியன், மாவட்ட அவைத்தலைவர் துரை, ஒன்றிய துணை செயலாளர் பெரியம்மாள்நீலன், வி.களத்தூர் ஊராட்சி கழக செயலாளர் காவியா ரவி, அன்னமங்கலம் ஆர்தர் ஹெல்லர், முன்னாள் கவுன்சிலர் அனுக்கூர் கதிர்மணி, ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் செந்தில்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திலகவதிரவிச்சந்திரன், அமைப்பு சாரா ஓட்டுனரணி மாவட்ட செயலாளர் முத்துசாமி, தேவையூர் கூட்டுறவு வங்கி தலைவர் சித்ரகுமார், வேப்பந்தட்டை குழந்தைவேல், அனுக்கூர் செங்கமலை மற்றும் திரளான அ.தி.மு.க வினர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.09.2026 - 11:50:38
Privacy-Data & cookie usage: