ஜெ.ஜெயலலிதா பிறந்த நாள்: பெரம்பலூர் மாவட்ட அதிமுகவினர் கொண்டாட்டம்

schedule
2019-02-24 | 06:19h
update
2019-02-24 | 06:28h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Jayalalithaa’s birthday Today: Perambalur AIADMK celebration all over district

பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் இன்று வெகு விமரிசையாக முன்னாள் முதலமைச்சரும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதாவின் 71 வது பிறந்த நாள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

இன்று காலை முதலே பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை ஆகிய ஒன்றியங்களில் உள்ள கிராம கிளைக் கழக நிர்வாகிகள் கொடி கம்பங்களுக்கு அதிமுக கட்சியின் வர்ணம் பூசி புத்தம் புதிய கொடியை ஏற்றி, அலங்கரிக்கப்பட்ட ஜெ.ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் வணங்கினர். பின்னர், பொதுமக்களுக்கு இனிப்புகள் மிட்டாய்கள், பொங்கல் வழங்கி, பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும், ஏழை எளிய மற்றும் ஆதரவற்றவர்களுக்கு மக்களுக்கு அக்கட்சி தொண்டர்கள் தாங்களால் இயன்ற துணிமணிகள், போர்வைகள், அறுசுவை உணவும் ஆங்காங்கே வழங்கி வருகின்றனர்.

Advertisement

அதே போன்று பெரம்பலூர் நகரில் இன்று காலை பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள ஜெ.ஜெயலலிதாவின் உருவ சிலைக்கு, மாணவரணி மாவட்ட செயலாளரும் பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர். தமிழ்ச்செல்வன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது பெரம்பலூர் எம்.பி மருதைராஜா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

மாவட்ட தொழில் நுட்ப பிரிவு சார்பாக துறைமங்கலத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர் மாணவர்களுக்கு உணவும், காமராஜர் வளைவு மற்றும் சங்கு திடலில் கொடியேற்றி இனிப்பு வழங்குதல், பின்னர், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றம சார்பில் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவித்தல், மாவட்ட மாணவரணி சார்பில் செங்குணம் பிரிவுச் சாலை அருகே உள்ள புனித லூயிஸ் முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகளும், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி சார்பில் ஓட்டுனர்களுக்கு சீருடையும், காலை வேளையில், வேப்பந்தட்டை ஒன்றியம் சார்பில் தொண்டைமாந்துறையிலும், குரும்பலூர் பேரூர் கழகம் சார்பில் குரும்பலூரிலும், பெரம்பலூர் ஒன்றியம் சார்பில் சத்திரமனையிலும், ஆலத்தூர் ஒன்றியம் சார்பில் ஆலத்தூர் கேட் பகுதியிலும், பிற்பகலில் வேப்பூர் ஒன்றியம் சார்பில் எம்.எஸ்.டி மண்டபத்தில் அன்னதான நிகழச்சிகளும், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி சார்பில் வேலா முதியோர் இல்லத்திலும், செந்துறை ஒன்றியம் சார்பில் செந்துறை பேருந்து நிலையம் அருகே அன்னதானமும், மாவட்ட அம்மா பேரவை சார்பில் செந்துறை அரசு மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் அன்னதானமும், இலக்கிய அணி சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு உணவும் எவர் சில்வர் தட்டும் மணக்குடையான் கிராமத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிகழச்சிகளின் போது ஒன்றிய செயலாளர்கள் கர்ணன் (ஆலத்தூர்), சிவப்பிரகாசம் (வேப்பந்தட்டை ), ஆலத்தூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் குரும்பாபாளையம் நாகராஜன், மற்றும் பல்வேறு அணி பொறுப்பாளர்கள், மகளிர் அணியினர், கிளைக்கழக வார்டு உறுப்பினர்கள், பேரூர் கழக பொறுப்பாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள், முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், முன்னாள் கவுன்சிலர்கள் உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இன்று பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் திருவிழாக்கோலம் கொண்டுள்ளது. ஆங்காங்கே கிராம் மற்றும் நகரங்களில் வார்டு தோறும் ஜெ.ஜெயலலிதாவின் புகழ் பாடல்கள் மைக் செட்டுகளில் ஒலித்து கொண்டு உள்ளது.

பின்னர் வரும் நாட்களில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தபட்டு, ஏழை எளிய மக்களுக்கு அதிமுக கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.07.2026 - 16:49:02
Privacy-Data & cookie usage: