ஜீவன் பிரம்மன் மின்னனு வாழ்வு சான்றிதழ்களை” இ.சேவை மையத்தில் பெறலாம்

schedule
2016-12-29 | 15:33h
update
2017-10-13 | 16:58h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Jeevan Prammaan Digital Life Certificate (DLC)

பெரம்பலூர் மாவட்ட கருவூலம் மற்றும் சார் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் அனைத்து ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் “ஜீவன் பிரம்மன் மின்னனு வாழ்வு சான்றிதழ்” தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் அரசு இ.சேவை மையங்களில் பெறலாம்.

Advertisement

விருப்பமுள்ள ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட அலுவலகங்களிலும் இயங்கி வரும் இ-சேவை மையத்தில் தங்களது ஆதார் எண்ணை தெரிவித்து, கைவிரல் ரேகை பதிவு செய்து, ஓய்வூதியம் தொடர்பான தகவல்களை தெரிவித்தால் அவர்களுக்கு மின்னனு வாழ்வு சான்றிதழ் அச்சிட்டு வழங்கப்படும்.

இதற்கு சேவைக் கட்டணமாக ரூ.10- (ரூபாய் பத்து மட்டும்) வசூல் செய்யப்படும். மேலும் இதுவரை ஆதார் எண்ணை மாவட்டக் கருவூலம், சார் கருவூலத்தில் பதிவு செய்யாத ஓய்வூதியதாரர்கள் மேலும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக பதிவு செய்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
29.06.2026 - 11:38:51
Privacy-Data & cookie usage: