ஜீவன் ரக்க்ஷா பதக்க விருதுகள் பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்: பெரம்பலூர் கலெக்டர் தகவல்!

schedule
2022-07-19 | 02:24h
update
2026-09-03 | 10:51h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Jeevan Raksha Awards Eligible Candidates Apply: Perambalur Collector Information!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பல்வேறு நிகழ்வுகளான நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்துகள், தீ விபத்துகள், நிலச்சரிவு, விலங்கினை தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட்டு மனித உயிர்களை மீட்பவர்களுக்கு கீழ் காணும் பிரிவுகளில் ஜீவன் ரக்க்ஷா பதக்க விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை வீரத்துடன் போராடி மீட்பவர்களுக்கு சர்வோத்தம் ஜீவன் ரக்க்ஷா பதக்கம் வழங்கப்படுகிறது. துணிச்சலுடன் தாமதம் இன்றி செயல்பட்டு மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை போராடி மீட்பவர்களுக்கு உத்தம் ஜீவன் ரக்க்ஷா பதக்கம் வழங்கப்படுகிறது. தனக்கு காயம் ஏற்பட்டாலும் வீரத்துடன் தாமதம் இன்றி போராடி உயிரை காப்பாற்றுபவர்களுக்கு ஜீவன் ரக்க்ஷா பதக்கம் வழங்கப்படுகிறது.

Advertisement

2022 ஆம் ஆண்டிற்கான ஜீவன் ரக்க்ஷா பதக்க விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்காணும் விருதுக்கான விண்ணப்பத்தை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகம், பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் விளையாட்டு அரங்கம், பெரம்பலூர் என்ற முகவரியில் பெற்றுக் கொண்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, 06.08.2022 அன்று மாலை 3 மணிக்குள் மூன்று நகல்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.09.2026 - 10:51:40
Privacy-Data & cookie usage: