#Jerusalem Pilgrimage: Rs 20 thousand financial assistance of Tamil Nadu government Program: Deadline Extension
தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறித்தவர்கள் ஜெருசேலம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20000- நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் கிறித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 16.12.2016க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அது தற்போது காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, அதற்கான விண்ணப்பங்கள் 30.12.2016 மாலை 5.45 மணிக்குள் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், 807, 5வது தளம், அண்ணாசாலை, சென்னை-600002 என்ற முகவரிக்கு கிடைக்குமாறு அனுப்பப்பட வேண்டும். இதர நிபந்தனைகளில் மாற்றம் ஏதும் இல்லை, என தெரிவிக்கப்பட்டுள்ளது.