பெரம்பலூர் மாவட்டம், வி.களத்தூர் அருகே நகை பணம் கொள்ளை! போலீசார் விசாரணை

schedule
2021-07-08 | 08:11h
update
2021-07-08 | 08:11h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Jewelery money robbery near V.Kalathur, Perambalur district! Police investigation

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூர் அருகே உள்ள மேட்டுச்சேரி பாரதியார் நகரைச் சேர்ந்தவர் அருள் மனைவி பானுமதி (24), இவர் இனாம்அகரத்தில் உள்ள தாய்வீட்டில் தங்கி உள்ளார். இரண்டரை வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அருளின் அத்தையான ஜெகதாம்பாள் (65), வி.களத்தூரை சேர்ந்த அவர், அருளின் அண்ணன் சாமிதுரை வீட்டில் தங்கி வந்துள்ளார். இன்று காலை 6 மணிக்கு ஜெகதாம்பாள் பானுமதியின் வீட்டை வந்து பார்த்த போது கதவு உடைக்கப்பட்டு, இருப்பதையும், உள்ளே இருந்த பீரோக்கள் திறந்து கிடப்பதாகவும், பானுமதிக்கு அங்கிருந்தவர்கள் மூலம் தகவல் தெரிவித்தார். வீட்டிற்கு பானுமதி பார்த்த போது வீட்டில் இருந்த அரை பவுன் தோடு, அரை பவுன் செயின் என ஒரு பவுனும், ரொக்கம் ரூ. 4ஆயிரமும் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. இது குறித்து தகவல் பானுமதி கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வி.களத்தூர் போலீசார், மோப்ப நாய் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பூட்டிய வீட்டில் துணிகரமாக நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 16:05:38
Privacy-Data & cookie usage: