சணல் பை, ஆடை அணிகலன் தயாரிப்பு, கம்யூட்டர் அக்கவுண்டிங்: ஐ.ஓ.பி வங்கி சார்பில் இலவச பயிற்சி!

schedule
2021-07-13 | 15:57h
update
2021-07-13 | 16:28h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Jute bag, apparel product, computer accounting: Free training on behalf of IOB Bank in Perambalur!

பெரம்பலூரில் உள்ள ஐஓபி – கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சணல் பை தயாரித்தல் ,ஆடை அணிகலன் தயாரிப்பு, கம்யூட்டர் அக்கவுண்டிங் ஆகியவை இலவச பயிற்சி வகுப்புகள் இலவசமாக இம்மாத இறுதியில் அளிக்கப்பட உள்ளன. இதற்கு 18 – 45 வயதிற்குள்ளும், எழுத படிக்க தெரிந்த,பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும், சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.

Advertisement

இப்பயிற்சி காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரையில், 10 முதல் 30 நாட்கள் நடக்கும். பயிற்சியின் போது காலை மற்றும் மதிய உணவு கட்டணமில்லாமல் வழங்கப்படும். அரசால் அங்கீகரிக்கப் பட்ட சான்றிதழ் வழங்கப்படுவோதோடு, வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும், கிராமப்புற இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் சங்குபேட்டை அருகே உள்ள ஐஓபி வங்கி மாடியில் உள்ள கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில், தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி மற்றும் குடும்ப அட்டை, ஆதார் கார்டு பெற்றோரின் நூறு நாள் வேலை அட்டை ஆகியவற்றின் நகல், 3 பாஸ்போர்ட் சைஸ் அளவு போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்கலாம் என்றும், மேலும் விவரங்களுக்கு 04328-277896, 9488840328 என்ற எண்ணிலோ தொலைப்பேசி மூலமாக தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 15:57:32
Privacy-Data & cookie usage: