Kalaigar Centenary Birthday Celebration General Meeting at Perambalur : District Secretary Kunnam C. Rajendran Report!

பெரம்பலூர் திமுக மாவட்ட செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் விடுத்துள்ள அறிக்கை:

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம், இன்று மாலை 5.00, மணியளவில், பெரம்பலூர் தேரடி திடலில் மாவட்ட செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் (எனது) தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் முன்னிலையில் நடைபெறுகிறது.

இதில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி – போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர். இதில் மாநில நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள்,
ஒன்றிய,நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள்,கழக முன்னோடிகள் அனைவரும் திரளாகக் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பிக்க வேண்டும், என
தெரிவித்துள்ளார்‌.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!