கலைஞரின் கனவு இல்லம் : பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் ; தெரணி கிராமத்தில் கலெக்டர் கற்பகம் கலந்து கொண்டார்.

schedule
2024-06-30 | 18:49h
update
2024-06-30 | 18:49h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Kalaigar Kanavu Illam : Special Gram Sabha Meeting in Perambalur District; Collector Karpagam of Terani village attended.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 கிராமங்களில் இன்று கிராம சபைக் கூட்டம் நடந்தது. ஆலத்தூரில், தெரணி கிராமத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் கலெக்டர் கற்பகம் கலந்து கொண்டார்.

கலைஞரின் வீடு வழங்கும் திட்டம் மற்றும் பழுதடைந்த ஊரக வீடுகளை சீரமைத்தல்” உள்ளிட்ட திட்டங்களின் கீழ் தேர்தெடுக்கப்பட்டுள்ள பயனாளிகள் குறித்து கிராம மக்களுக்கு தெரிவிக்கும் வகையிலான சிறப்பு கிராம சபைக்கூட்டம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் நடைபெற்றது.

குடிசைகள் இல்லா தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையிலான தமிழ்நாடு அரசு ”கலைஞரின் கனவு இல்லம்” என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளது. வீடற்ற, குடிசை வீடுகளில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு அரசின் சார்பில் வீடு கட்டித்தருவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

Advertisement

கிராம சபைக்கூட்டத்தில் “கலைஞரின் கனவு இல்லம்” 2024-25 ஆம் ஆண்டு திட்டத்தின் கீழ், பயனாளிகளை தேர்ந்தெடுத்தல் பல்வேறு கணக்கெடுப்புகளின் மூலம் சேகரிக்கப்பட்ட வீட்டு வசதி தேவைகளுக்கான தரவுகள் ஒருங்கிணைக்கப்பட்டு “அனைவருக்கும் வீடு” என்ற நோக்கத்தில் கணக்கெடுப்பு விவரங்கள் கிராம ஊராட்சி அளவிலான குழு மூலம் கள ஆய்வு செய்து சரிபார்க்கப்பட்டு தகுதியான பயனாளிகளின் பட்டியலை கிராம சபையில் அனைவருக்கும் தெரியும்வகையில் வாசித்து காண்பித்து ஒப்புதல் பெறப்பட்டது.

மேலும், “பழுதடைந்த ஊரக வீடுகளை சீரமைத்தல்” 2024-25 ஆம் ஆண்டு திட்டத்தின் கீழ் 2000-2001 ஆம் ஆண்டிற்கு முன்பு கட்டப்பட்ட ஓட்டு வீடுகள் மற்றும் சாய்தள கான்கிரீட் கூரை வீடுகள் பழுதுநீக்கம் செய்வது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு விவரங்கள் பயனாளிகள் பட்டியல் கிராம ஊராட்சி அளவிலான குழு மூலம் கள ஆய்வு செய்து சரிப்பார்க்கப்பட்ட தகுதியான பயனாளிகள் பட்டியல் அனைவருக்கும் தெரியும்வகையில் வாசித்து காண்பித்து ஒப்புதல் பெறப்பட்டது.

அதனைத்தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 145 மனுக்களை கலெக்டர் கற்பகம் பெற்றுக் கொண்டார்.

ஒவ்வொருவரின் மனு மீதும் தனிக்கவனம் செலுத்தி சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்து, அதற்கான அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும் என்று சம்மந்தப்பட்ட அரசுத்துறை அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் தெரணி ஊராட்சி தலைவர் ரமேஷ் உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக கூட்டத்தில், அந்த ஊரில் செயல்பட்டு வரும் ( சோலார் ) சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் கம்பனி, அரசுக்கு சொந்தமான இடத்தை மறித்து வருவதோடு, பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் நடந்து கொள்வதாகவும், மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் சோலர் கம்பனிக்கு, ஆதராக செயல்படுவதாகவும், இதற்கு உரிய தீர்வு காணவேண்டும் என்றும் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும், ஊராட்சியில் நடந்து வரும் குளறுபடிகளை களைய வேண்டும் என்றும் மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.08.2026 - 10:13:00
Privacy-Data & cookie usage: