கலைஞர் கருணாநிதி பிறந்த நாள்; பெரம்பலூர் திமுக சார்பில் துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

schedule
2021-06-03 | 19:37h
update
2021-06-03 | 19:37h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Kalaigar Karunanidhi’s birthday; On behalf of Perambalur DMK, Deputy General Secretary A. Raja provided welfare assistance.

பெரம்பலூரில், திமுக சார்பில் கலைஞர் கருணாநிதியின் 98-வது பிறந்தநாள் விழா மாவட்டம் முழுவதும் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. மேலும், கட்சியினர் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால் ஏற்பாட்டில், அன்பகம் குழந்தைகள் காப்பகத்தில் 83 பேருக்கு புத்தாடைகள் மற்றும் 3 வேளைக்கு உணவும், மற்ற அணியினர் சார்பில், ஆட்டோ தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், மருத்துவ நாவிதர் தொழிலாளர்கள் 400 பேருக்கு அரிசி, காய்கறிகள் ஆகியவற்றை கழக துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா எம். பி.வழங்கினார். இதில் பெரம்பலூர் எம்.எல்.ஏ., பிரபாகரன்,
முன்னாள் எம்.எல்.ஏ ம.ராஜ்குமார், மாநில நிர்வாகிகள் பா. துரைசாமி, டாக்டர் செ. வல்லபன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என். ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர், மாவட்ட பொருளாளர் செ.இரவிச்சந்திரன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.நல்லதம்பி, பசும்பலூர் கிளைச் செயலாளர் ஜெயபால் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் திரளாக சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 20:10:36
Privacy-Data & cookie usage: