பெரம்பலூரில் கலைஞர் பிறந்த நாள்: திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் வாலிபால் போட்டி! வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது!

schedule
2023-12-03 | 16:46h
update
2023-12-03 | 16:46h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Kalaingar’s Birthday in Perambalur: Volleyball Tournament by DMK Sports Development Team! Prizes awarded to winners!

பெரம்பலூரில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த கையுந்து பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்டச் செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் – சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் பரிசுகளை வழங்கினார்கள்!

பெரம்பலூர் மாவட்டத்தில், கலைஞர் நூற்றாண்டு விழா, மற்றும் மாநில இளைஞரணி செயலாளரும் – இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாடு அணி சார்பாக.
மாவட்ட அளவிலான கையுந்துப்பந்து போட்டி டிசம்பர் 2மற்றும் 3. ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள், பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடங்கி நடைபெற்றது. இந்த போட்டியை பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர்
எம்.பிரபாகரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Advertisement

இப்போட்டியில் மாவட்டத்தில் இருந்து 24 அணியை சேர்ந்த வாலிபால் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினார்கள். டிசம்பர் 3-ம் தேதி நடந்த இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட அளவில் ஆந்திரா பிரதர்ஸ் அணியும், 2ம் இடத்தை தனலட்சுமி சீனிவாசன் பிசிகல் எஜுகேசனல் கல்லூரியும், 3ம் இடத்தை மாஸ் அணியினரும், 4ம் இடத்தை மாஸ் பிரதர்ஸ் அணியினரும் வெற்றி பெற்றனர். முதல் பரிசு வென்ற அணியினருக்கு திமுக மாவட்ட செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரனும், 2ம் பரிசை எம்.எல்.ஏ பிரபாகரனும், 3ம் பரிசை மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கரும், 4ம் இடத்தை வேப்பூர் ஒன்றிய செயலளார் மருவத்தூர் சி.ராஜேந்திரனும் வழங்கினர்.

இதில் முதல் நான்கு இடங்களில் வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கும், சிறப்பாக விளையாடிய விளையாட்டு வீரர் இரண்டு பேருக்கும் மற்றும், நடுவர்கள், நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் களத்தூர். கார்மேகம், துணை அமைப்பாளர்கள் செ.சாம்ராஜ், குணசேகரன், வெற்றிவேல், மனோகர், சுரேஷ், வக்கீல் ரகுபினேஷ் மற்றும் விளையாட்டு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2026 - 10:13:20
Privacy-Data & cookie usage: