வீர தீர செயல்புரிந்த பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது: பெரம்பலூர் கலெக்டர் அறிவிப்பு

schedule
2021-06-23 | 17:07h
update
2021-06-23 | 17:08h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Kalpana Chawla Award for Heroic Coastal Activists: Perambalur Collector Announcement

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டு எந்தத் துறையிலும் வீரத்துடன் துணிவு மற்றும் தைரியமாகவும், சாதுர்யமாக செயல்பட்டு உயிரை காத்த ஆற்றல் மிக்க நடவடிக்கைக்காக கல்பனா சாவ்லா விருது ஆண்டுதோறும் ஒரு பெண்ணிற்கு, தமிழக அரசின் சார்பாக வருகிற ஆகஸ்ட் மாதம் 15 ஆம் நாள், சுதந்திர தின விழா அன்று தமிழக முதலமைச்சரால் வழங்கப்பட உள்ளது. இவ்விருதுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பும் கிடையாது.

Advertisement

மேற்காணும் விருதுகளுக்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம். தகுதியான விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் விளையாட்டரங்கம், மாவட்ட ஆட்சியர் வளாகம் பின்புறம், பெரம்பலூர் என்ற முகவரிக்கு 25.06.2021 அன்று மாலை 5.00க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரின் கைபேசி 74017 03516 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.06.2026 - 00:51:29
Privacy-Data & cookie usage: