கல்பனா சாவ்லா விருது பெற தகுதி வாய்ந்த பெரம்பலூர் மாவட்ட பெண்களுக்கு அழைப்பு!

schedule
2020-08-05 | 01:21h
update
2026-05-08 | 07:08h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Kalpana Chawla Award Perambalur district is eligible to receive an invitation to women!

பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல்:

Advertisement

மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் “கல்பனா சாவ்லா விருது” அறிவிக்கப்பட்டு, தகுதி வாய்ந்த பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. பெண்களுக்கு விதிவிலக்காக துணிச்சலான செயல், எந்தவொரு துறையிலும், செயல்பாட்டிலும் தைரியம் மற்றும் தைரியமான தொழில் புரியும் பெண்களுக்கு ஊக்குவிக்கும் விதமாக “கல்பனா சாவ்லா விருது” என்னும் பெண்களுக்கான விருது வழங்கப்படுகிறது. இவ்விருது ரூ.1 லட்சத்திற்கான காசோலை மற்றும் பதக்கம் ஆகியவற்றை கொண்டதாகும்.

இவ்விருதுக்கு சாதனை புரிந்த பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெற கடைசி நாள்: 08.08.2020 ஆகும். கடைசி நாளிற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. பெறப்பட்ட விண்ணப்பங்களிடமிருந்து அனைத்து தகுதிகள் பெற்ற விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு குடியரசு தினத்தன்று “கல்பனா சாவ்லா விருது” வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.05.2026 - 07:08:46
Privacy-Data & cookie usage: