கற்கும் பாரதம் பயனாளிகள் அனைவருக்கும் ஆக. 21 ல் அடிப்படை எழுத்தறிவு தேர்வு

schedule
2016-08-17 | 16:33h
update
2026-09-23 | 03:50h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

kargum bharatham for everyone to become beneficiaries. Exam from 21 basic literacy in perambalur

கற்கும் பாரதம் திட்டத்தில் 15 – 80 வயதிற்குள் எழுத படிக்க தெரியாத பயனாளிகள் அனைவருக்கும் ஆக. 21 ல் அடிப்படை எழுத்தறிவு தேர்வு என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் க.முனுசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் கற்கும் பாரதம் திட்டத்தில் பயன்பெறும் 15 வயதிற்கு மேல் 80 வயதிற்குள் எழுதபடிக்க தெரியாத பயனாளிகள் அனைவருக்கும் வரும் ஆக. 21 அன்று அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடைபெற உள்ளது.

இத்தேர்வு நான்கு ஒன்றியங்களில் உள்ள அந்தந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.

இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் 295 பயனாளிகள் தேர்வு எழுத உள்ளனர். மேலும், இத்தேர்வினை கற்கும் பாரத மையத்தில் படித்தவர்களும், மையத்தில் படிக்காத மற்றவர்களும் இத்தேர்வினை எழுதலாம். மேலும் கடந்த முறை நடந்து முடிந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்களும் இத்தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.09.2026 - 03:50:59
Privacy-Data & cookie usage: