பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் தீபத்திருவிழா

schedule
2018-11-23 | 19:39h
update
2026-06-29 | 19:48h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

karthigai Deepam festival at Brahmarshi mountain in Elampur near Perambalur

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் மகா சித்தர்கள் டிரஸ்ட் சார்பில் கார்த்திகை தீபத்தையொட்டி மகா தீபம் ஏற்றப்பட்டது.

பெரம்பலூர் மகா சித்தர்கள் டிரஸ்ட் சார்பில் ஆண்டுதோறும் எளம்பலூர் பிரம்மரிஷிமலையில் ஆண்டுதோறும் தீப திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி 36-வது ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா நேற்று கொண்டாப்பட்டது.

Advertisement

பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் இருந்து நேற்று காலை 6 மணிக்கு கோ பூஜை மற்றும் அஸ்வபூஜையும், 7 மணிக்கு 210 சித்தர்கள் யாகமும், 10 மணிக்கு கஜ ஊர்வலம், தீப செப்பு கொப்பறை, திரி, நெய் ஆகியவற்றுடன் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

பேரூர் மடத்து 63 நாயன்மார்கள் பஞ்சலோக சிலை, திருவாரூர் சிவனடியார்களுடன், ஸ்ரீசிவராமலிங்க சுவாமி சிவ பூதகன வாத்தியங்கள் மற்றும் 63 மேள தாள இசை முழுங்க ஒட்டகம் மற்றும் குதிரையுடன் எளம்பலூர் பிரம்மரிஷி மலைக்கு ஊர்வலமாக தீப பொருள்கள் கொண்டு வரப்பட்டது.

பின்னர் ராஜ்குமார் குருஜி தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா மகா தீபம் ஏற்றுதலை தொடங்கிவைத்தார்.

பிரம்மரிஷி மலையின் மேல் 6 அடி உயரத்தில் பெரிய செம்பு கொப்பைறை வைக்கப்பட்டு அதில் 1008 மீட்டர் நீளமுள்ள திரி, 1008 கிலோ பசு நெய், 100 டின் எண்ணெய் மற்றும் 100 கிலோ கற்பூரம் கொண்டு அருட்பெருஞ்ஜோதி மகாதீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து சாதுகளுக்கு வஸ்திரதானமும், பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

விழாவில் சிவசேனா கொள்கை பரப்பு செயலாளர் சசிகுமார், பாஜ.தேசிய பொதுகுழு உறுப்பினர் சிவசுப்ரமணியம், சுபிச்ஷா சாமிநாதன், சென்னை ஜெகத்ராம்ஜி, திட்டக்குடி ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை மகா சித்தர்கள் டிரஸ்ட் இணை நிறுவனர் ரோகினி, இயக்குநர்கள் சுந்தரமகாலிங்கம், தவசிநாதன் மற்றும் மெய்யன்பர்கள் செய்திருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
29.06.2026 - 19:48:52
Privacy-Data & cookie usage: