சேந்தமங்கலம் அருகே டிராக்டர் டிரைவர் கொலை; மகனிடம் போலீசார் தீவிர விசாரணை

schedule
2018-09-17 | 18:28h
update
2026-04-23 | 05:12h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Killing tractor driver near Senthamangalam Son of intensive investigation to the Police

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே டிராக்டர் டிரைவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து மகனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

சேந்தமங்கலம் அருகே உள்ள கல்குறிச்சி தேவேந்திர தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி (43). இவர் டிராக்டர் டிரைவராக பணியாற்றி வந்தார். மதுபழக்கத்திற்கு அடிமையான பெரியசாமி, நாள்தோறும் மது அருந்திவிட்டு மனைவி மணிமேகலையிடம் தகராறில் ஈடுபடுவது வழக்கம்.

இதனால் மனமுடைந்த மணிமேகலை தனது ஒரு மகன், இரு மகளுடன் சேந்தமங்கலம் அருகே பழையபாளையத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று காலை பெரியசாமி அவரது வீட்டில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். தகவல் அறிந்த பேளுக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

மேலும் நாமக்கல்லில் இருந்து சீமா என்ற போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது மோப்ப நாய் வீட்டிலிருந்து சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது.

சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பேளுக்குறிச்சி போலீசார் சந்தேகத்தின்பேரில் பெரியசாமியின் மகன் அஜித் (20) என்பவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.04.2026 - 05:12:15
Privacy-Data & cookie usage: