பெரம்பலூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி!

schedule
2019-05-10 | 15:40h
update
2019-05-10 | 15:48h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

kills Auto driver in Accident near Perambalur

பெரம்பலூர் மாவட்டம், சு.ஆடுதுறை அருகே ஆட்டோ கவிழ்ந்து ஆட்டோ டிரைவர் பலியானர்

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், லப்பைகுடிக்காட்டை சேர்ந்தவர் முகமது இப்ராகிம் (வயது 53) இவர் சொந்தமாக ஆட்டோ வாங்கி வாடகைக்கு ஓட்டி வருகிறார். நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டு இருந்தது. அப்போது அத்தியூருக்கு சவாரி சென்று விட்டு ஆடுதுறை அருகே வந்து கொண்டு இருந்த போது திடிரென அருகில் இருந்த பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் முகமது இப்ராகிம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மங்களமேடு போலிசார் இறந்தவர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
07.08.2026 - 05:01:02
Privacy-Data & cookie usage: