பெரம்பலூர் அருகே வெவ்வேறு விபத்துகளில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த இருவர் பரிதாப பலி!

schedule
2019-01-27 | 15:46h
update
2019-01-27 | 15:48h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Kills Two tragic accidents in different near in Perambalur

பெரம்பலூர் அருகே இன்று மாலை ஏற்பட்ட வெவ்வேறு இருசக்கர வாகன விபத்துகளில் இருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், கீரம்பூர் அருகே உள்ள குறிச்சி – வண்ணாடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் கார்த்தி (வயது சுமார் 30), இவர் இன்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு வந்து விட்டு சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது பெரம்பலூர் அருகே உள்ள கோனேரிப்பாளையம் புறவழிச்சாலையை கடக்க முயன்ற போது, கரூரில் இருந்து புதுச்சேரிக்கு பெட்ரோலிய பொருட்களை ஏற்றி சென்ற லாரி மோதியது. இதில் கார்த்தி சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டு, போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும், பலியான கார்த்திக்கின் உடலை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அவர்கள், இறந்த போனவரின் உறவினர்களுக்கு தகவலும் தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விபத்திற்கு காரணமான லாரியை பறிமுதல் செய்ததுடன், ஓட்டுனரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு விபத்து:

விபத்து நடந்த சற்று நேரத்திற்கு பிறகு, அந்தப் பகுதியின் அருகிலேயே கிருஷ்ணாபுரம் காது குத்து விழாவிற்கு சென்று விட்டு, சொந்த ஊரான திருச்சி அருகே உள்ள திருவாணைக்கோவில் வெள்ளத்திருமுட்டம் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் கோனேரிப்பாளையம் கிராமத்தில் செல்லும் சாலையின் தடுப்பு கட்டையின் மீது மோதியதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு அங்கிருந்தவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பெற்று வந்த ஒரு மணிநேரத்திற்கு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்தும் பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உடற்கூறு ஆய்விற்காக முருகேசனின் உடலும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கிடத்தி வைக்கப்பட்டுள்ளது.

கோனேரிப்பாளைத்தில், ஏற்பட்ட அடுத்தடுத்த விபத்துகள் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.04.2026 - 10:40:06
Privacy-Data & cookie usage: