Kisan Samman special camp for the disadvantaged farmers in the financial plan

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல்:

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட திட்டம். இத்திட்டம் 01.12.2018 முதல் அமுல்படுத்தப்படுகிறது. இத்திட்டதின் கீழ் சிறு மற்றும் குறு விவசாயிகளின் வருவாய் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஒரு விவசாய குடும்பத்திற்கு வருடம் தோறும் ரூ.6,000 மூன்று சம தவணைகளில் ஒரு தவணைக்கு ரூ.2,000 வழங்கும் திட்டமாகும்.

இத்திட்டதில் பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டு ஹெக்டேர் வரை விவசாய நிலம் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளிடமிருந்து இதுவரை 63,251 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தகவல் பதிவேற்ற பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளது.

இத்திட்டத்தில் தகுதியுள்ள விடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மேலும் ஒரு வாய்ப்பாக 25.02.2019 முதல் 27.02.2019 வரை மூன்று தினங்களும் அனைத்து கிராமத்திலும் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதில் இதுவரை விண்ணப்பம் அளிக்காத தகுதியுள்ள விவசாயிகள் தங்களுடைய கணிணி சிட்டா நகல், ஆதார் கார்டு நகல், ரேசன் கார்டு நகல், வங்கி பாஸ் புக் நகல் மற்றும் போட்டோ உடன் தங்கள் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலரை அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.

எனவே, தகுதியுள்ள விடுபட்டுள்ள விவசாயிகள் இந்த வாய்பினை பயன்படுத்தி தங்களது விண்ணப்பத்தை உறுதிமொழி படிவத்துடன் சமர்ப்பித்து இத்திட்டத்தில் பயனடையுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.


Copyright 2015 - © 2021 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Tamil Daily News -Kalaimalar.

error: Content is protected !!