Kumbabhishegam festival celebrated in the temple of Ramanathapuram Kalanjiyam katha Munieeswarar: Thousands of Devotees darshan

ராமநாதபுரம் வடக்கு தெரு ஸ்ரீ களஞ்சியம்காத்த முனீஸ்வரர், ஸ்ரீ ஜெய்வீர காளியம்மன் , ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது.

ராமநாதபுரம் வடக்கு தெரு ஸ்ரீகளஞ்சியம்காத்த முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் விழா விக்னேஸ்வரர் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து முதல்கால யாகசாலை புஜை மற்றும் அதனை தொடர்ந்து இரண்டு மற்றும் முன்று கால யாகசால புஜை நடந்தது. முன்றாம் யாகசாலை புஜையை தொடர்ந்து கடம்புறப்பாடு நடந்தது.

கோயில் முக்கியஸ்தர்கள் புண்ணிய நீர் நிரம்பிய குடங்களை சுமந்தவாறு யாகசாலையை சுற்றிவந்து பின் கோயில் கோபுரத்தில் ஏறி முனீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்கள் கொண்ட கோபுரங்களில் கருடன் வானத்தில் வலம் வர வேதவிற்பன்னர்கள் வேதங்கள் முழங்க புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தினர்.

ராமநாதபுரம் அரண்மனை மன்னர் பரம்பரையை சேர்ந்த மன்னர் குமரன் சேதுபதி ராணி லட்சுமி, ராமநாதபுரம் தொழிலதிபர் இன்பா ரகு உட்பட ஆயிர கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசிதித்து புனித நீரை தலையில் தெளித்து வேண்டி சென்றனர்.

கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை வடக்கு தெரு இளைஞர் அணி, குல தெய்வ வழிபாட்டுகாரர்கள், ஸ்ரீபால ஆஞ்சநேயர் பக்தர் குழு மற்றும் திருப்பணி குழு ஆகியோர் செய்திருந்தனர்.

கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து ஆயிர கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை இன்பா ரகு, இவரது மனைவி விஜியதா தேவி ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!