Kummiyattam that captivated everyone: Girls and boys performed at the temple festival near Perambalur!
பெரம்பலூர் அருகே வேப்பத்தட்டையில் உள்ள அருள்மிகு வேதமாரியம்மன் கோவில் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான கும்மியாட்ட நிகழ்வு நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட பெண்களும் சிறுவர் சிறுமிகளும் கலந்து கொண்டு கும்மிபாடலை ஆடி பாடினர். கொங்கு பகுதிகளில் பிரபலமான கும்மியாட்ட நிகழ்வை ஒத்திருந்தது. இந்த கும்மியாட்ட நிகழ்வு திருவிழாவிற்கு வந்த பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.
முன்னதாக கோவில் திருவிழாவில் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. அதில் திரளானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.