குன்னம் அதிமுக வேட்பாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்: பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு!

schedule
2021-03-17 | 07:06h
update
2021-03-17 | 07:06h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Kunnam AIADMK candidate RT Ramachandran started his election campaign: Women are welcome to take Aarti!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதிக்கு 2வது முறையாக களம் காணும் அதிமுக வேட்பாளர் ஆர்.டி.இராமச்சந்திரன் இன்று காலை குரும்பாபாளையம் கிராமத்தில் தேர்தல் பிரச்சார பயணத்தை கட்சியினருடன் தொடங்கினார். பெண்கள் ஆங்காங்கே ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டனர். வழியெல்லாம் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வேட்பாளர் இராமச்சந்திரன் அதிமுக ஆட்சியின் சாதனைகளையும், தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களையும் எடுத்துரைத்து பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார். அப்போது ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் கர்ணன், பிரபாகரன், குரும்பாபாளையம் நாகராஜன், உள்ளிட்ட பிரமுகர்கள் கூட்டணி கட்சிகளை சேர்ந்த பாமக, பாஜக, தாமக கட்சியினர் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர், கொட்டரை, ஆதனூர், மதுராகுடிக்காடு, சீராநத்தம், இலந்தங்குழி, தொண்டப்பாடி, மேலஉசேன்நகரம், வேப்பமர காலணி, கீழஉசேன்நகரம், அல்லிநகரம், குறிஞ்சிப்பாடி, மங்கலம், கீழமாத்தூர், சீதாராமபுரம், சடைக்கன்பட்டி, அழகிரிபாளையம், மருதையான் கோவில், வரிசைப்பட்டி, மேலமாத்தூர், தங்கநகரம், ஆகிய பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்குகளை சேகரித்து வருகிறார்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.06.2026 - 00:22:29
Privacy-Data & cookie usage: