குன்னம் அதிமுக வேட்பாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் தேர்தல் பிரச்சாரம்: நரிக்குறவ பெண்கள் ஆரத்தி எடுத்து, மலர் தூவி உற்சாக வரவேற்பு!

schedule
2021-03-23 | 14:50h
update
2021-03-23 | 14:53h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Kunnam AIADMK candidate RT Ramachandran’s election campaign: Narikkurava women take Aarti and welcome with flowers!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் சட்ட மன்ற தொகுதியில் 2வது முறையாக களம் காணும் அதிமுக வேட்பாளர் ஆர்.டி.இராமச்ச ந்திரன் இன்று ஆலத்தூர் ஒன்றியத்திலுள்ள புதுக்குறிச்சி கிராமத்தில் தனது தேர்தல் பிரச்சார பயணத்தை கட்சியினருடன் தொடங்கினார். வழி நெடுகிலும் பெண்கள் ஆங்காங்கே ஆரத்தி எடுத்து வெற்றி திலக மிட்டும், மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செய்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Advertisement

இதன் ஒரு பகுதியாக நரிக்குறவ மக்கள் வசிக்கும் மலையப்பநகர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட வேட்பாளர் ஆர்.டி. இராமச்சந்திரனுக்கு, தாமக மாநில கொள்கை பரப்பு செயலாளர் காரை.சுப்பிரமணியளன் தலைமையில் நரிக்குறவ இன பெண்கள் ஆரத்தி எடுத்து, மலர் தூவி வரவேற்பு அளித்தனர். அவர்களிடம் வாக்கு சேகரித்த வேட்பாளர், அதிமுக ஆட்சியின் 10 ஆண்டுகால சாதனைகளையும், தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களையும் எடுத்துரைத்தார்.

மேலும், நரிக்குறவ இன மக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக விளையாட்டு மைதானத்தை சீரமைத்து, விளையாட்டு உபகரணங்க ளை வாங்கி தருவதாகவும், சட்ட மன்ற தேர்தலுக்கு பின்னர் தனது சொந்த செலவில் பள்ளியை தரம் உயர்த்த 1 லட்சத்து 50 ஆயிரம் முன் தொகை செலுத்துவதாகவும் வாக்குறுதி அளித்து பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார்.

புதுக்குறிச்சி கிராமத்தை தொடர்ந்து தெரணி, காரை, சமத்துவபுரம், மலையப்ப நகர், வரகுபாடி, சிறுகனூர், தெற்கு மாதவி, நத்தக்காடு, எஸ்.குடிக்காடு சாத்தனூர், இலுப்பையூர், கூடலூர், கொளத்தூர், அணைப்பாடி, அய்யனாபுரம், கொளக்காநத்தம் ஆகிய பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக அதிமுக வேட்பாளர் வாக்குக ளை சேகரித்து வருகிறார். பிரச்சாரத்தில், ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் கர்ணன், பாமக, பாஜக, மற்றும் தாமக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.05.2026 - 18:48:56
Privacy-Data & cookie usage: