குன்னம் சட்ட மன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோருடன் இருசக்கர வாகனத்தில் தொகுதி முழுவதும் பேரணியாக சென்று தீவிர பிரச்சாரம்

schedule
2016-05-14 | 10:44h
update
2026-06-14 | 13:48h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்ட மன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் இன்று குன்னம் சட்டமன்ற தொதிக்கு உட்பட்ட திருமாந்துறை கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சி பிரமுகர்கள் , தொண்டர்களுடன் இரு சக்கர வாகனத்தில் தனது பிரச்சாரத்தை துவங்கிய வேட்பாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் லப்பைக்குடிக்காடு, பென்னக்கோணம், கழனிவாசல், ஆடுதுறை, ஒகளூர், அத்தியூர், கிழுமத்தூர், அகரம்சீகூர், வசிஷ்டபுரம், எம்.கே.நல்லூர், பி.கே.நல்லூர், வேள்விமங்களம், கீழப்பெரம்பலூர், வயலூர், வயலப்பாடி, துங்கபுரம் உட்பட 25க்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் வீதி, வீதியாக இரு சக்கர வாகனத்தில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Advertisement

பிரச்சாரத்தின் போது, அதிமுக அரசின் 5 ஆண்டுகால சாதனைகள் மற்றும் தேர்தல் அறிக்கையை விநியோகம் செய்து தன்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த பிரச்சாரத்தின் போது சிதம்பரம் தொகுதி எம்.பி,சந்திரகாசி உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர்.

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளருக்கு கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட பொது மக்கள் வெடி வெடித்தும், சால்வை அணிவித்தும், ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டு உற்சாகமாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 13:49:07
Privacy-Data & cookie usage: