குன்னம்; தொகுதியில் முதல் பெண் வேட்பாளராக நிற்கிறேன்; என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்! கல்வி, மருத்துவத்தை முதன்மையாக்குவேன்; வேட்பாளர் சரண்யா பிரச்சாரம்!

schedule
2026-04-18 | 22:04h
update
2026-04-18 | 22:04h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Kunnam: “I stand as the first female candidate in this constituency; help me achieve victory! I will prioritize education and healthcare.” — Candidate Saranya campaigns.

குன்னம் தொகுதி ஐஜேகே வேட்பாளராக சரண்யா போட்டியிடுகிறார். நேற்று, வேப்பூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் ஒன்றிய செயலாளர் ஏ.கே. ராஜேந்திரன் ஏற்பாட்டில், முன்னாள் துணை சபாநாயகர் ஆ.அருணாச்சலம் தலைமையில், முன்னாள் எம்.பி சந்திரகாசி, பெரம்பலூர் அதிமுக மாவட்ட அவைத் தலைவர் குன்னம். குணசீலன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. அப்போது அவர் பேசியதாவது:

Advertisement

“குன்னம் தொகுதியின் முதல் பெண் வேட்பாளராகிய எனக்கு, அனைவரும் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு உங்கள் பொற்பாதங்களை வணங்கி கேட்டுக்கொள்கிறேன். குன்னம் தொகுதி மருத்துவத்திலும் கல்வியிலும் முதன்மையாகச் செயல்பட்டு வருவதற்கு நிச்சயம் நான் பாடுபடுவேன். அனைவரும் எனக்கு ஒரு வாய்ப்பளித்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த ஏற்பாடு செய்த நம்முடைய கழகப் பொறுப்பாளர்கள், இந்திய தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொறுப்பாளர்கள், பா.ம.க பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து கட்சி பொறுப்பாளர்களுக்கும் என் சார்பாக நன்றி, நன்றி. நமது சின்னம்… இரட்டை இலை ! நமது சின்னம்…இரட்டை இலை!! என பேசினார்.

அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் நாகராஜன், வி.ஜி.எம் @ வெங்கடாசலம், குன்னம் முன்னாள் ஊராட்சித் தலைவர் இளங்கோவன், முன்னாள் கவுன்சிலர் முருகேசன், மதியழகன், பொதுக்குழு உறுப்பினர் ரெங்கநாதன், கிளை செயலாளர் ராஜா, ரமேஷ், வெள்ளையன் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். பெண்கள் ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டு வாழ்த்தினர்.

முன்னதாக சித்தளி, ஒதியம், கரம்பியம், குன்னம் மற்றும் செந்துறை ஒன்றியத்திற்கு உட்பட்ட முதுக்குளம், முள்ளுக்குறிச்சி, மருங்கூர், துளார் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் பிரச்சாரம் செய்தார்

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.04.2026 - 22:24:44
Privacy-Data & cookie usage: