தமிழகத்திலுள்ள பெண்களின் வாழ்க்கையிலும், முன்னேற்றத்திலும் பெரிதும் அக்கறை கொண்டவர் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா

குன்னம் எம்.எல்.ஏ இராமசந்திரன் பேச்சு

schedule
2016-06-02 | 18:29h
update
2026-06-27 | 06:45h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் அரசு பொது மருத்துவமனையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பாக 160 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ராமசந்திரன், தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :

தமிழகத்திலுள்ள பெண்களின் வாழ்க்கையிலும், அவர்களது பொருளாதார முன்னேற்றத்திலும் பெரிதும் அக்கறை கொண்ட நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள், பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்கள்.

அதன்படி அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளை பெற்றெடுக்கும் ஏழை, எளிய தாய்மார்களுடைய குழந்தைகளின் நலன் கருதி அக்குழந்தைகளுக்கு தேவையான 16 பொருட்கள் அடங்கிய அம்மா பெட்டகத்தை வழங்கிய இந்தியாவின் ஒரே முதலமைச்சர் நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மட்டுமே.

Advertisement

மேலும் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்மார்களின் வசதிக்காக பேருந்து நிலையங்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறை, பள்ளிகளில் பயிலும் வளரிளம் பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை ஒரு தாயாக இருந்து பெண்களின் முன்னேற்றத்திற்காக நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என பேசினார்.

இந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற கர்பிணி பெண்களுக்கு உடல் நல பரிசோதனை, ஸ்கேன், இரத்தப்பரிசோதனை, உயரம், எடை ஆகியவை கண்டறியப்பட்டது. மேலும் கர்பகாலத்தில் 10 கிலோ எடை கூடுதல், சரிவிகித உணவு எடுத்துக் கொள்ளுதல், தாய்பாலின் அவசியம், மருத்துவமனை பிரசவம், சீம்பாலின் அவசியம், மற்றும் இணை உணவு குறித்து மருத்துவ அலுவலரால் விளக்கம் அளிக்கப்பட்டது.

இவ்விழாவில் பங்கேற்ற உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு ஐந்து வகை உணவு, கர்ப்பகால பராமரிப்பு, தாய்ப்பாலின் அவசியம், இணை உணவு, மருத்துவ மனையின் தொலைபேசி எண்கள், குழந்தைகளின் எடை விபரங்கள் அடங்கிய கையேடு வளைகாப்பில் பங்கேற்க உள்ள கர்ப்பிணி பெண்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

இதுவரை பெரம்பலூர் வேப்பந்தட்டை, ஆலத்தூர் வேப்பூர் என நான்கு வட்டாரங்களிலும் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிகளில் 545 கர்பினித்தாய்மார்கள் பயனடைந்துள்ளனர் என்னபது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் வேப்பூர் ஒன்றியக் குழுத் தலைவர் கிருஷ்ணக்குமார், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் முத்துமீனாள், உட்பட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 06:45:53
Privacy-Data & cookie usage: