தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டிய கொள்ளையனை மடக்கி பிடித்த குன்னம் போலீசார்!

schedule
2021-09-28 | 16:38h
update
2021-09-28 | 16:38h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Kunnam police caught the robber who showed handcuffs all over Tamil Nadu!

தமிழகம் முழுவதும், பல இடங்களில் கைவரிசையை காட்டி தப்பி சென்ற கொள்ளையனை பெரம்பலூர் மாவட்டம், குன்னம் போலீசார் , வேலூர் மாவட்டம், சத்துவாச்சேரி அருகே மடக்கி பிடித்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நன்னை கிராமத்தில் உரக்கடையில் ரூ. 50 ஆயிரம் கொள்ளை போனது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்திய போலீசார், செல்போன் சிக்னல் மற்றும் கைரேகை கொண்டு ஆய்வு செய்ததில், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள தென்செட்டியானந்தல் பகுதியை சேர்ந்த மாதேஸ்வரன் மகன் வெங்கடேசன் (23) , என்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து குன்னம் போலீசார் அவனை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்தன் பேரில், வேலூர் மாவட்டம், சத்துவாச்சேரியில் பதுங்கி இருந்த கொள்ளையனை கைது செய்து குன்னம் அழைத்து வந்து நடத்திய விசாரணையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கைவரிசையை காட்டியது தெரியவந்தது. பின்னர், நீதிமன்றத்தில், ஆஜர்படுத்தி, சிறைக்கு அனுப்பி வைப்பி வைத்தனர். கொள்ளை அடித்த ரூ.50 ஆயிரத்தில், 10 ஆயிரத்தை போலீசார் மீட்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.08.2026 - 21:38:44
Privacy-Data & cookie usage: