குன்னம்; ஏழை எளிய மக்களுக்குப் பொருளாதாரம் போய் சேர, பொருளாதாரப் புரட்சியை முன்னெடுக்கின்ற கட்சி திமுக.; அனைந்திந்திய பாட்டாளி முன்னேறக் கட்சி நிறுவனர் சி.என். ராமமூர்த்தி திமுக அமைச்சர் சிவசங்கருக்கு செய்த பிரச்சாரத்தில் பேச்சு!

schedule
2026-04-18 | 13:55h
update
2026-04-18 | 13:55h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Kunnam: The DMK is the party spearheading an economic revolution to ensure that economic benefits reach the poor and underprivileged sections of society. — C.N. Ramamoorthy, Founder of the All India Proletarian Progressive Party, stated this while campaigning for DMK Minister Sivasankar.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதியில் உள்ள நொச்சிக்குளம் கிராமத்தில் இன்று திமுக வேட்பாளரான அமைச்சர் சிவசங்கர் மதசார்பற்ற கூட்டணி கட்சியினருடன் பிரச்சாரம் செய்தார். அப்போது, அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சியின் நிறுவனர் தலைவர் சி.என் ராமமூர்த்தி வேட்பாளர் சிவசங்கருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். பின்னர். அவர் பேசியதாவது:

“மதச்சார்பற்ற ஜனநாயக் கூட்டணியின் சார்பாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக போட்டியிடுகின்ற அருமை சகோதரர்… அருமை சகோதரர் மாண்புமிகு போக்குவரத்துத் துறை மற்றும் மின்துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி அவர்களுக்கு அகில இந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சியின் சார்பாக எங்களது வாழ்த்துக்களையும் ஆதரவையும் நாங்கள் ஒருமனதாக தெரிவித்துக் கொள்கிறோம்.”

“டாக்டர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்திலேதான் 18 சதவீத ஒதுக்கீடு என்பது பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டது. பட்டியலின பழங்குடியினர் எங்களுக்குப் போட்டியிட்டு நாங்கள் இதிலே வெற்றி பெற்று வேலை வாய்ப்புகளை இடம்பிடிக்கவில்லை என்று சொன்னபோது, அவர் நீதிமன்றத்தை நாடியபோது, நீதிமன்றம் இவருடைய கோரிக்கைகளை செவிசாய்க்கவில்லை என்று சொல்லி தீர்ப்பளித்தபோது, டாக்டர் முதல்வர் அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள்தான் நான் 18-லிருந்து ஒன்றை பிரித்துத் தர விரும்பவில்லை, பொதுவிலே இருந்ததை எடுத்து ஒரு சதவீத ஒதுக்கீட்டை பட்டியலின பழங்குடியினருக்கு வழங்கி சிறப்பு செய்தார்கள். அதனால்தான் இன்றைக்கு வந்து 18.1 என்று இருக்கிறது.”

Advertisement

“அதேபோன்று வன்னியர் சமுதாயத்திற்கு காட்டுப் படைக்கு 20 சதவீத ஒதுக்கீட்டைத் தந்து 108 ஜாதிகளுக்கு அதையெல்லாவற்றையும் சேர்த்து வழங்கினார்கள். அதுவும் கலைஞர் ஆட்சிக் காலத்தில்தான் நடந்தது. இதை ஏன் நான் சுட்டிக்காட்டுகிறேன் என்று சொன்னால் சமூக நீதிக்கான, சமத்துவத்திற்கான, சகோதரத்துவத்தைப் போற்றுகின்ற கட்சியாக திராவிட முன்னேற்றக் கழகம் இருந்து கொண்டிருக்கிறது. அதன் வேட்பாளராக போட்டியிடுகின்ற மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு நீங்கள் உதயசூரியன் சின்னத்திலே வாக்களித்து பெருவாரியான வாக்குகளை வெற்றி பெற நீங்கள் உழைக்க வேண்டும், அவருக்கு வாக்களிக்க வேண்டும், உதயசூரியன் சின்னத்திலே வாக்களிக்க வேண்டும்.”

“இன்னொன்று நடைபெறுகின்ற தமிழகம், இன்றைக்கு நிறைய பேர் நிறைய கருத்துக்களைச் சொன்னாலும் திராவிட முன்னேற்றக் கழகம் என்பது இந்தியாவிலே இந்த மாநிலத்தில்தான் ஒரு பசுமைப் புரட்சியை முன்னெடுத்திருக்கிறது. விவசாயிகளுக்கென்று தனியான ஒரு நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்து, அதன் மூலம் அந்த விவசாய மக்களுக்கு ஒரு பெரிய புரட்சியை இந்த நாட்டிலே ஏற்படுத்தி இருக்கிறது. அதேபோன்று கால்நடைகள், கால்நடைச் செல்வங்கள் நமது நாட்டிற்கு முக்கியம் என்பதோடு பால்வளத்துறை, பால்வளத்துறையை இதுவரை இல்லாத அளவிற்கு இந்தியாவிலே முதலிடத்திற்கு கொண்டு சென்று பால்வளத்துறை அதாவது ‘ஒயிட் ரெவல்யூஷன்’ (White Revolution) என்று சொல்வார்கள், அது வந்து வெண்மைப் புரட்சி. முதலில் நான் சொன்னது பசுமைப் புரட்சி, இது வெண்மைப் புரட்சி.”

“அதற்கடுத்ததாக தொழில் புரட்சி என்பது உலகெங்கிலும் இருக்கின்ற நாடுகளுக்குப் பயணித்து அங்கிருக்கின்றவர்களை எல்லாம் அழைத்து வந்து இங்கு முதலீடு செய்ய வைத்து இந்தியாவிலேயே அதிகமான முதலீடுகளை ஈர்த்து மிகப்பெரிய வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தந்தது திராவிட முன்னேற்றக் கழகம். இது வந்து தொழில் புரட்சி.”

“அதற்கடுத்து கல்விப் புரட்சி, எல்லாவற்றிற்கும் மேலாக எல்லோரும் பயன்படுகின்ற விதத்திலே எட்டாம் வகுப்பு படிக்கின்ற வரை அவர்களுக்கு மதிய உணவு மட்டுமல்ல, அனைத்து உதவிகளையும் பெண்களுக்கெல்லாம் சேர்த்துச் செய்து மிகச் சிறிய அளவிலே சீரிய அளவிலே கல்விப் புரட்சியை இந்தியாவிலே தமிழகம் தான் முன்னின்று நடத்திக் கொண்டிருக்கிறது.”

“இது வந்து மொத்தம் இந்த நான்கு புரட்சிகள். ஒன்று வந்து பசுமைப் புரட்சி, இரண்டாவது வெண்மைப் புரட்சி, மூன்றாவது தொழில் புரட்சி, நான்காவது கல்விப் புரட்சி. இப்படி நான்கு புரட்சிகளையும் ஒருசேரச் செய்து இந்தியாவிலேயே ஏழை எளிய மக்களுக்குப் பொருளாதாரம் போய் சேர வேண்டும் என்கின்ற பொருளாதாரப் புரட்சியை முன்னெடுக்கின்ற கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்.”

“இன்றைக்கு ஏழை எளிய மக்களுக்கு வருமானம் வந்திருக்கிறது என்று சொன்னால் அதற்கெல்லாம் இந்த வேலைகளைச் செய்து அல்லும் பகலும் அயராது உழைத்து முன்னுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். அப்பேற்பட்ட இந்த திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அதிலே சிறப்பாகப் பணியாற்றி இருக்கின்ற நமது அமைச்சர் பெருமகனாருக்கு நீங்கள் உதயசூரியன் சின்னத்திலே வாக்களித்து மிகப்பெரிய வித்தியாசத்திலே அவரை வெற்றி அடையச் செய்ய வேண்டும்மாய் நான் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன். என பேசினார்.

பின்னர், திமுகவின் சமூக நீதிப் பணிகளும், தலைநிமிரும் தமிழகமும் என்ற 8 பக்கம் பிரசுரத்தை பொதுமக்களுக்க வழங்கினார். அப்போது அனைந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சியினர் உள்பட மதசார்பற்ற கூட்டணி கட்சியினர் பெரும் திரளாக உடனிருந்தனர். முன்னதாக, னைந்திந்திய பாட்டாளி முன்னேறக் கட்சி நிறுவனர் சி.என். ராமமூர்த்தி பொன்னாடை போர்த்தி வாழ்த்துகளை தெரிவித்தார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.04.2026 - 14:25:32
Privacy-Data & cookie usage: