குன்னம்; பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குகளை சேகரித்த தவெக வேட்பாளர்!

schedule
2026-04-16 | 13:04h
update
2026-04-16 | 13:04h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Kunnam: TVK Candidate Canvasses for Votes Under Heavy Police Protection!

குன்னம் தொகுதிக்கு உட்பட்ட செந்துறை அம்பேத்கர் குடியிருப்பு பகுதியில், தவெக வேட்பாளர் ரேவதி முத்தமிழ்செல்வன் இன்று மதியம் 1 மணிக்கு உரிய அனுமதி பெற்று தேர்தல் பிரச்சாரம் செய்ய சென்றார். அங்குள்ள சில கட்சியின் ஆதரவாளர்கள் அவருக்கு கருப்பு கொடி காண்பித்து அவரை பிரச்சாரம் செய்ய கூடாது என்று தடுக்க போவதாக வந்த தகவல் வந்ததால், இது குறித்து வேட்பாளர் சார்பில், போலீசில் புகார் அளிக்கப்படடது. மேலும், பிரச்சாரம் செய்வதை தடுத்தால் பெரம்பலூர் ஒதியம் பாதைக்கு பிரச்சாரத்திற்கு வரும் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு சுமார் 2 ஆயிரம் தொண்டர்கள் கருப்பு கொடி காட்டுவோம் என அறிவிப்பு செய்த நிலையில், பலத்த பாதுகாப்புடன் அப்பகுதியில் உள்ளே சென்று வீடு வீடாக பிரச்சாரம் செய்து விசில் சின்னத்திற்கு வாக்குகளை தவெக கட்சியினர் வேட்பாளர் ரேவதி உடன் சேகரித்தனர்.

Advertisement

உரிய பாதுகாப்பு அளித்த போலீசாருக்கும், குன்னம் சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலருக்கும் அக்கட்சியினர் நன்றி தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.04.2026 - 13:17:22
Privacy-Data & cookie usage: