ஆய்வக உதவியாளர் பணி : தேர்வான நபர்களுக்கு பணி நியமன ஆணை

schedule
2017-04-17 | 18:58h
update
2026-06-18 | 03:55h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Lab Assistant: persons elected to the Employment Order

பெரம்பலூர் : பள்ளிக் கல்வித் துறை சார்பில் தமிழ்நாடு பொது சார்நிலைப் பணி ஆய்வக உதவியாளர் பணிக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு பின்னர் (9.04.2017) அன்று சான்றுகள் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்றது. பின்னர் தேர்வு செய்யப்பட்ட தகுதி வாய்ந்த 40 நபர்களுக்கு கலந்தாய்வில் கலந்துக் கொள்ள அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டது.

Advertisement

அதனை தொடர்ந்து இன்று (17.04.2017) பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப் பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் ஆகியோர் முன்னிலையில் கலந்தாய்வு நடைபெற்றது.

இதில் 37 நபர்கள் கலந்தாய்வில் கலந்து கொண்டனர். 3 நபர்கள் கலந்தாய்வில் பங்குபெறவில்லை. இந்த 37 நபர்களும் கலந்தாய்வின் மூலம் தங்களுக்குரிய பணியிடத்தை தேர்வு செய்தனர்.

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணையினை பெரம்பலூர் முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்டக் கல்வி அலுவலர் பெ.அம்பிகாபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 03:55:42
Privacy-Data & cookie usage: