லட்சுமி டெஸ்ட் டியூப் பேபி சென்டர் : ஆ.இராஜா இன்று திறந்து வைத்தார்.

schedule
2016-10-02 | 09:52h
update
2026-06-27 | 18:13h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Lakshmi Test Tube Baby Center: A.Raja inaugurated today.

பெரம்பலூர் லட்சுமி மருத்துவமனையின் அடுத்த பரிணாம வளர்ச்சியாக லட்சுமி டெஸ்ட் டியூப் பேபி சென்டரை ( செயற்கை கருதரிப்பு மையம்) முன்னாள் மத்திய அமைச்சரும், திமுகவின் கொள்கை பரப்பு செயலாளருமான ஆ.இராஜா இன்று காலை திறந்து வைத்தார்.

Advertisement

இந்த மையத்தினை முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராஜா திறக்க வைத்து வாழத்துரை வழங்கினார். முன்னதாக, லட்சுமி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் கருணாகரன் வரவேற்றார். சி.பி.எம். கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் என்.செல்லதுரை ஆகியோர் வாழத்துரை வழங்கினர்.

இவ்விழாவில், மருத்துவர் ஜெயலட்சுமி, ஆசிரியர் தங்கராசு, திமுக மாவட்ட செயலாளர் குன்னம்.சி.இராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் எம்.ராஜ்குமார் (பெரம்பலூர்), சி.சிவசங்கர் (குன்னம்), வழக்கறிஞர் துரைராஜ், பெரம்பலூர் நகர செயலாளர் ம.பிரபாகரன், 7 வது வார்டு முன்னாள் கவுன்சிலர் கி.கனகராஜ், உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 18:13:26
Privacy-Data & cookie usage: