பெரம்பலூர் அருகே நிலப்பிரச்சினை; கொலை முயற்சியில் ஈடுபட்ட 7 பேருக்கு சிறை தண்டனை: 64,500 ரூபாய் அபராதம்

schedule
2019-03-15 | 18:09h
update
2019-03-15 | 18:09h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Land issue near Perambalur The conviction of seven persons involved in the murder attempt: 64,500 rupees fine

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள அத்தியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ராமர், ரவிச்சந்திரன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 7 பேருக்கும் நிலப்பிரச்சினை தொடர்பாக கடந்த 2003ஆண்டு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஜெயராமனை தகாத வார்த்தையில் பேசி, கொலை செய்யும் நோக்கத்தில் தாக்கியதாக மங்ளமேடு போலீசில் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று வழக்கு விசாரணை முடிவில் ராமர், ரவிச்சந்திரன், கிருஷ்ணமூர்த்தி, சுப்பிரமணி ஆகிய நான்கு பேருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 37,500 ரூபாய் அபராதமும், ராஜபூபதி என்பவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டைனயும், 11, 500 ரூபாய் அபராதமும், அன்புராஜி என்பவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டைனயும், 7500 ரூபாய் அபராதமும், அலமேலு என்பவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டைனயும், 7500 ரூபாய் அபராதமும் விதித்து பெரம்பலூர் குற்றவியல் நீதி மன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து குற்றவாளிகள் 7 பேரும் போலீசாரால் சிறையில அடைக்கப்பட்டனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.04.2026 - 21:57:33
Privacy-Data & cookie usage: