நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நிலஅளைவ அலுவலர்கள் ஆப்பாட்டம்

schedule
2019-01-04 | 16:53h
update
2019-01-04 | 16:53h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Land survey Officials demonstrated infornt of Namakkal Collectorate

நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் யூனியன் சார்பில் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் நடராசன் தலைமை வகித்தார். செயலாளர் சிவசங்கர பாண்டியன் முன்னிலை வகித்தார். குறுவட்ட அளவர் செந்தில் குமார் வரவேற்றார்.

Advertisement

ஆர்ப்பாட்டத்தில் உட்பிரிவு பட்டா மாற்றம் பணியில் கிராம நிர்வாக அலுவர்கள் பரிந்துரைதேவையில்லை. நகர்புறத்தில் முழுப்புல பட்டா மாறுதலை சார் ஆய்வாளர்கள் மேற்கொள்ளும் முறையை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாற்றும் முறையை கைவிடவேண்டும்.

சென்னையில் கூடுதல் இயக்குனர் பதவியை உரிய அலுவலருக்கு வழங்கவேண்டும். 2017-18 துணை ஆய்வாளர் பட்டியலை முறைப்படுத்த வேண்டும். குறுவட்ட அளவர்கள் மேல்நிலை அனைத்து அலுவலர்களுக்கும் பயணப்படி வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தப்பட்டன.

இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினார். முடிவில் பொருளாளர் இளங்கோவன் நன்றி கூறினார். இதில் நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த நில அலுவர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.04.2026 - 15:47:21
Privacy-Data & cookie usage: