Last night’s heavy rainfall in parts of Esanai and Veppanthattai The water came up to Lake in perambalur Districts
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்றிரவு சுமார் 8.50க்கு பெய்யத் தொடங்கிய மழை தொடர்நது சுமார் இரண்டரை மணிற நேரம் மழை இடி மின்னலுடன் பொழிந்தது. இதனால் மின் வினியோம் துண்டிக்கப்பட்டது. வயல் வெளிகள், குட்டை மற்றும்குளங்களில் தண்ணீர் நிரம்பியது. வறட்சியால் பாதிக்கபட்டு கடும தண்ணீர் பஞ்சத்தை சந்திதது வரும் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதே போன்று, எசனை, கீழக்கரை ஏரிகளுக்கு ஓரளவு தண்ணீர் வந்தது. இதனால் அப்பகுதி நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது.
மேலும், அதிகாரிகள் மெத்தனத்தால் உரிய காலத்தில் வரத்து வாய்க்காலை ஆக்கிரமிப்பு அகராற்றததால் கீழக்கரையை சேர்ந்த ராமராஜ் என்பவரது வயலில் உள்ள வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் மழை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு சேதமடைந்தது. கிணற்றுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. கிணற்றில் உள்ள மோட்டர் முற்றும் நனைந்தது. இதே அக்கம் பக்கத்தில உள்ள விவசாயிகளின் வயல்களும் சேதமடைந்தன.
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரை பெய்த மழைளவு விவரம் (மி.மீ) :
பெரம்பலூர் 11, வேப்பந்தட்டை 120, தழுதாழை 9, செட்டிக்குளம் 0, பாடாலூர் 0, என மொத்தம் 140 மி.மீ மழை பதிவாகி இருந்தது. மாவட்டத்தின் சராசரி மழையளவு 28.மி.மீ ஆகும்.