Launched by AMMA Ambulance Vehicle Service for Livestock at Perambalur

பெரம்பலூர் மாவட்டத்தில் 37 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 3 கிளை நிலையங்கள் மூலம் கால்நடை பராமரிப்புத்துறையினரால் கால்நடைகளுக்கான சிகிச்சை மற்றும் கருவூட்டல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வப்போது கால்நடை மருத்துவ வசதி இல்லாத கிராமங்கள் தோறும் முகாம்கள் நடத்தியும், விவசாயிகளின் கால்நடைகளுக்கு சிகிச்சை மேற்கொண்டு கால்நடை நலன் பாதுகாக்கப்படுகிறது. மேலும் அவசர காலங்களில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக அனைத்து மாவட்டங்களிலும் தமிழக அரசால் அம்மா ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்திற்கான அம்மா ஆம்புலன்ஸ் வாகனத்தின் சேவையை கலெக்டர் வே.சாந்தா மாவட்ட ஆட்சியரக நுழைவாயில் முன்பு கொடியசைத்து தொடங்கி வைத்தார்

இத்திட்டத்தின் கீழ் கால்நடைகள் ஏதேனும் நோய்வாய்பட்டு, சிகிச்சைக்காக அருகிலுள்ள கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல இயலாத பட்சத்தில் அம்மா ஆம்புலன்ஸ் வாகனத்தின் இலவச அழைப்பு எண்ணான 1962-க்கு அழைத்தால், கால்நடை வளர்போரின் இல்லங்களுக்கே நேரடியாக வருகைதந்து,கால்நடை துறை மருத்துவர்கள் மூலமாக இலவசமாக சிகிச்சை அளிக்கவும், கால்நடைகளுக்கு தேவையான மருந்துகளை அளிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் மேல்சிகிச்சை தேவைப்படும் கால்நடைகளுக்கு நாமக்கல் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த கால்நடை வளர்ப்போர;கள் அனைவரும் இத்திட்டத்தை முழுமையாக பயன்படுத்திக்கொண்டு, தங்கள் கால்நடைகளை பாதுகாத்துக்கொள்ள தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் (பொறுப்பு) த.குணசேகர், உதவி இயக்குனர் மும்மூர்த்தி, உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!