Laws for the Protection of Women: Minister of Awakening was initiated by Manikantan

ராமநாதபுரம் மாவட்டம் அரண்மனை வாசல் அருகே சமுகநலத்துறையின் சார்பாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தேசிய மகளிர் ஆணைய வெள்ளி விழாவை முன்னிட்டு பெண்களை காக்கும் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஊர்வலத்தில் ராமநாதபுரம் அரசு பெண்கள் கல்லுாரி மாணவிகள், ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், சமுகநல விரிவாக்க அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் சார்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள்கலந்து கொண்டு பெண்களை பாதுகாக்கும் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கையில் ஏந்தியவாறும் கோசமிட்டவாறும் சென்றனர். அரண்மனையில் துவங்கிய ஊர்வலம் கேணிக்கரை உட்பட முக்கிய வீதிகள் வழியாக சென்று அரசு மகளிர் கல்லுாரியை அடைந்து நிறைவு பெற்றது.

மாவட்ட சமுக நல அலுவலர் குணசேகரி, ராம்கோ தலைவர் செ.முருகேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, உதவி மகளிர் திட்ட அலுவலர் குருநாதன் உட்பட பலர் பங்ேகற்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!