கோடை விடுமுறையில் அடிப்படை நீச்சல் கற்றுகொள்ளும் பயிற்சி முகாம்

schedule
2017-04-18 | 13:39h
update
2026-06-25 | 00:29h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Learning basic swimming training camp in the summer holidays in perambalur

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலார் ம.இராமசுப்பிரமணியராஜா விடுத்துள்ள தகவல் :

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அமைத்துள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் கற்றுக் கொள்ளும் திட்டத்தின் கீழ் நீச்சல் ;வகுப்புகள் பிரதி திங்கள் கிழமை தவிர அனைத்து நாட்களும் நடத்தப்பட உள்ளது.

Advertisement

முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் 21.04.2017 முதல் 04.05.2017 வரை மாலை நேரங்கள் மட்டும் 3.00 மணி முதல் 4 வரை, 4.00 மணி முதல் 5.00 வரை, 5.00 மணி முதல் 6.00 வரை, 6.00 மணி முதல் 7.00 வரை ஆகிய நேரங்களிலும்,

இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் 05.05.2017 முதல் 18.05.2017 வரையிலும்,

மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்புகள் 19.05.2017 முதல் 01.06.2017 வரை காலை 7.00 மணி முதல் 8.00 வரை, 8.00 மணி முதல் 9.00 வரை. மற்றும் மாலை ; 3.00 மணி முதல் 4 வரை, 4.00 மணி முதல் 5.00 வரை, 5.00 மணி முதல் 6.00 வரை, 6.00 மணி முதல் 7.00 வரை ஆகிய நேரங்களிலும் காலை, மாலை இருவேளையும் சிறந்த நீச்சல் பயிற்றுநரை கொண்டு 12 நீச்சல் பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 12 வகுப்புகளில் அடிப்படை நீச்சல் பயிற்சி முழுமையாக கற்றுத்தரப்படும்.

எனவே, கோடை விடுமுறையில் மாணவ, மாணவிகள் அனைவரும் அடிப்படை நீச்சல் பயிற்சி கற்று பயன்பெறவும், உடல் திறனை மேம்படுத்தி சிறந்த நீச்சல் வீரர், வீராங்கனைகளாக உருவாகவும், தேசிய,சர்வதேச நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறவும்,

பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் நல்லதொரு வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும், மேலும், விவரங்களுக்கு நீச்சல் பயிற்றுநர் என். அன்பரசை 9965639606, 8220113260 என்ற எண்ணிலும், மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை 8220999499 தொடர்பு கொண்டு பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.06.2026 - 00:30:13
Privacy-Data & cookie usage: