பெரம்பலூர் அருகே எல்..டி.இ டி.வி ரொக்கம் ரூ. 35 ஆயிரம் திருட்டு

schedule
2021-02-07 | 05:33h
update
2021-02-07 | 05:33h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

LED TV and Rs. 35 thousand theft near Perambalur

Advertisement

பெரம்பலூர் அருகே உள்ள புது நடுவலூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (50). இவர் திருச்சி சமயபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கேண்டீன் வைத்து தொழில் செய்து வருகிறார். இதனால் குடும்பத்துடன் அங்கேயே தங்கியுள்ளார். கடந்த 29ஆம் தேதி தனது வீட்டிற்கு விஜயகுமார் வந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இது பற்றி தகவலறிந்த விஜயகுமார் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 35 ஆயிரம் பணம், எல்இடி டிவி ஆகியவை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு 75 ஆயிரம் என கூறப்படுகிறது. பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுகுறித்து விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.06.2026 - 04:19:46
Privacy-Data & cookie usage: