பெரம்பலூர் நீதிமன்றத்தில் சட்ட உதவி மையம் : நீதிபதி பாலராஜமாணிக்கம் தொடங்கி வைத்தார்.

schedule
2017-11-14 | 15:12h
update
2017-11-14 | 15:39h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Legal Aid Center at Perambalur Court: Judge Bala raja manikkam inaugurated

பெரம்பலூர் நீதிமன்ற வளாகத்தில் பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் இன்று சட்ட உதவி மையத்தை நீதிபதி பாலராஜமாணிக்கம் திறந்து வைத்தார்.

அப்போது நீதிபதி பாலராஜமாணிக்கம் பேசியதாவது:

Advertisement

கடந்த நவ. 11 முதல் 18 வரை சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. சட்டம் அனைவருக்கும் சமம், ஏழை பணக்காரர் வித்தியாசமில்லமல் நீதி பரிபாலனம் நடக்க வேண்டும்.

அதற்கு இந்த சட்ட உதவி மையம் உதவி செய்யும். இந்த உதவி மையம் இங்கு செயல்படும் பின்னர் மாற்று முறை தீர்வு மையத்தில் செயல்படும்.

சட்ட உதவி மையத்தை நல்ல முறையில் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இதில் வழக்கறிஞர்கள், தன்னார்வலர்கள், வழக்காடிகளுக்காக சட்ட உதவிகள் செய்வார்கள் என பேசினார்.

முன்னதாக நிகழ்ச்சியில், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் எம்.சஞ்சீவி பாஸ்கர், மகிளா நீதிமன்ற நீதிபதி என்.விஜயகாந்த் சார்பு நீதிபதி எஸ்.ஜெயந்தி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான எம்.வினோதா, மாவட்ட உரிமையியல் நீதிபதி மகேந்திர வர்மா, நீதித்துறை நடுவர் கே.மோகனப்பிரியா, ஆகியோர் கலந்து கொண்டு சட்ட உதவி பெற தகுதியானவர்கள் மற்றும் சட்ட விழிப்புணர்வு அறிக்கையை கொண்ட துண்டு பிரசுரங்களை நீதிபதிகள் அங்கிருந்தவர்களுக்கு வழங்கினர்.

பெரம்பலூர் பார் கவுன்சில் அசோசியசன் தலைவர் வள்ளுவன்நம்பி, அரசு வழக்கறிஞர்கள், மற்றும் வழக்கறிஞர்கள் செந்தில்நாதன், சிவராமன் , நல்லுசாமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.06.2026 - 05:31:45
Privacy-Data & cookie usage: