பெரம்பலூர் அருகே ஆள் கடத்தலுக்கு எதிரான சட்ட விழிப்புணர்வு முகாம்!

schedule
2024-07-31 | 07:55h
update
2024-07-31 | 07:55h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Legal awareness camp against human trafficking near Perambalur!

இதில் தலைமை வகித்த, பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவருமான (பொறுப்பு) சங்கர் ஆள்கடத்தலுக்கு எதிரான சட்ட விழிப்புணர்வு குறித்து தெளிவாக எடுத்துரைத்தார்.

ஆள்கடத்தல் மற்றும் பெண் குழந்தைகள் கடத்தல் குறித்தும், ஆள்கடத்தல் என்பது உடலில் உள்ள பாகங்களை எடுத்து வணிகம் செய்வதற்காக (organ trafficking) மனிதக் கடத்தல் நடக்கிறது, பெண் குழந்தைகள் கடத்தலுக்கு எதிராக 2012 ல் போக்சோ சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதில் பெண் குழந்தைகள் பாலியல் ரீதியாக ஒரு வணிகத்தில் ஈடுபடுத்துவற்காக வேண்டியும், சமுதாயத்தில் கீழ்மட்டத்தில் இருக்கும் ஏழ்மையான நிலையில் இருப்பவர்களை அவர்களின் ஆழ்நிலையை பயன்படுத்தி, அவர்களின் பெற்றோர்களை மூளைசலவை செய்து நல்ல எதிர்காலம் இருக்கும் என்று அவர்களை அழைத்து சென்ற பாலியல் வணிகத்தில் ஈடுபடுத்துகிறார்கள். இதனால் சமுதாயத்திற்கு சீர்கேடு ஏற்பட்டு பல குற்ற செயல்கள் நிகழ்கிறது.

Advertisement

நமது அரசியலமைப்பு சட்டத்தில் குழந்தைகள் அனைவருக்கும் கட்டாய கல்வி கொடுக்க வேண்டும் என்பதனை கூறுகிறது. ஆள்கடத்தல், பெண் குழந்தைகள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்து சென்று அவர்களை வியாபார ரீதியாக அடிமைபடுத்தி வைக்கிறார்கள். இது சமுதாயத்தில் கொத்தடிமை முறைக்கு வழிவகை செய்கிறது என பேசினார்.

மேலும் இம்முகாமில் மாவட்ட துணை கண்காணிப்பாளர் வளவன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் முதன்மை சட்ட பாதுகாப்பு ஆலோசகர் சிராஜீதீன் மற்றும் துணை சட்ட பாதுகாப்பு ஆலோசகர் திருஞானம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசகர் மகேஸ்வரி குழந்தைகளுக்கான சட்டங்கள் குறித்தும், பொதுமக்களுக்கான சட்ட கருத்துறைகளும் தெளிவாக எடுத்துரைத்தனர். இதில் தொழிலாளர்கள் நல ஆய்வாளர் ராணி உட்பட பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக பேரளி ஊராட்சிமன்ற துணைத் தலைவர் ராமசாமி வரவேற்றார். மீரா பவுன்டேசன் குழுவினர் ஜெயராமன் நன்றி தெரிவித்தார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.07.2026 - 03:37:25
Privacy-Data & cookie usage: