மக்களிடம் செல்வோம்

சொல்வோம் – மக்கள் மனதைவெல்வோம் திமுகவின் நாமக்கல் மாவட்டத்தில் ஊராட்சி சபைக் கூட்டங்கள்

schedule
2019-01-05 | 17:22h
update
2019-01-05 | 17:36h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Let’s go to the people – tell people – the minds of the people in Namakkal district of the DMK Panchayat meetings

நாமக்கல் மாவட்ட திமுக பொறுப்பாளா; செ.காந்திசெல்வன் விடுத்துள்ள அறிவிப்பு:

நாமக்கல் கிழக்கு மாவட்டம்,சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி,எருமப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்டஊராட்சிகளில் ஊராட்சிசபைக் கூட்டங்கள் எனது தலைமையில், நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர், முன்னாள் அமைச்சரும், கழக சொத்து பாதுகாப்புக் குழு துணைத் தலைவருமான பொங்கலூர்.ந.பழனிசாமி முன்னிலையில் நடைபெறஉள்ளது.

கழகதலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனதை வெல்வோம் என்ற நோக்கத்துடன், மத்தியில் நடைபெறும் பாசிச ஆட்சியை அகற்றிடவும், மாநிலத்தில் எடப்பாடி தலைமையிலான மக்கள் விரோத ஆட்சியை அகற்றிடவும், மக்கள் விரும்பும் நல்லாட்சிஅமைந்திடவும், கழகதலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சிஅமைந்திட, நம் மாவட்டத்தில் உள்ள 175 ஊராட்சிளிலும் ஊராட்சிசபைக் கூட்டங்கள் நடத்தப்படும்.

Advertisement

முதற்கட்டமாக 16 ஊராட்சிகளில் வருகின்ற 08.01.2019-ம் தேதி முதல் 11.01.2019-வரை நான்கு நாட்கள் கீழ்கண்ட பட்டியல்படி நடைபெறவுள்ளது.

இந்தஊராட்சிச் சபைக் கூட்டங்களில் அந்தந்த பகுதியில் உள்ள மாவட்டநிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் சட்ட பேரவை உறுப்பினர்கள், ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், ஊராட்சி கழக நிர்வாகிகள், மூத்த முன்னோடிகள் கழக தொண்டர்கள், மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளைஅந்தந்த பகுதி ஒன்றிய செயலாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் சிறப்பாக செய்திட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்றும் நிகழ்ச்சி நிரலையும் இணைத்துள்ளார்.

வ.எண் தேதி – கிழமை நேரம் ஒன்றியம் கூட்டம் நடைபெறும் ஊராட்சி

1 08.01.2019 செவ்வாய்கிழமை மாலை 3மணி எருமப்பட்டிஒன்றியம் முத்துகாப்பட்டி

2 மாலை 4மணி பழையபாளையம்

3 மாலை 5மணி சிவநாயக்கன்பட்டி

4 மாலை 6 மணி போடிநாயக்கன்பட்டி

5 09.01.2019 புதன்;கிழமை மாலை 3 மணி அலங்காநத்தம்

6 மாலை 4 மணி பொட்டிரெட்டிப்பட்டி

7 மாலை 5 மணி புதுக்கோட்டை

8 மாலை 6 மணி திப்ரமாதேவி

9 10.01.2019 வியாழக்;கிழமை மாலை 3 மணி தேவராயபுரம்

10 மாலை 4 மணி வரகூர்

11 மாலை 5 மணி பவித்ரம்

12 மாலை 6 மணி பவித்ரம் புதூர்

13 11.01.2019 வெள்ளிக்கிழமை மாலை 3 மணி வரதராஜபுரம்

14 மாலை 4 மணி முட்டாஞ்செட்டி
15 மாலை 5 மணி காவக்காரன்பட்டி
16 மாலை 6 மணி நாமக்கல் ஒன்றியம் வகுரம்பட்டி

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.09.2026 - 18:43:15
Privacy-Data & cookie usage: