மனைவியை சந்தேகத்தின் பேரில் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து பெரம்பலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

schedule
2017-01-10 | 10:24h
update
2026-06-26 | 22:51h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Life imprisonment for murdering his wife on suspicion of Mahila Court Perambalur

நடத்தை சந்தேகத்தில் மனைவியை கொலை செய்து விட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து பெரம்பலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு கூறியது

பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 45), இவரது மனைவி ஜெயலட்சுமி (38), கடந்த 2013 ஆம் ஆண்டு மே மாதம் 19த் தேதி அன்று சின்னசாமி அவரது மனைவி ஜெயலட்சுமியின் நடத்தையில் சந்தேகப்பட்டு வீட்டினுள் இருந்த போது அரிவாளால் வெட்டி சாய்த்தார். சம்பவ இடத்திலேயே ஜெயலட்சுமி பரிதாபமமாக உயிரிழந்தார்.

Advertisement

இது குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனது. இந்த வழக்கு பெரம்பலூர் மகிளா நீதிமன்த்தில் நடந்து வந்தது. இந்நிலையில் இன்று விசாரணை முடிவில் மனைவியை கொலை செய்த சின்னசாமிக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். அபராதம் கட்டத் தவறினால் ஓர் ஆண்டு கூடுதலாக சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், மற்றொரு பிரிவில் தற்கொலைக்கு முயன்ற சின்னசாமிக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் விதித்தார். அபராதம் கட்டத் தவறினால் ஓர் ஆண்டு மேலும் கூடுதலாக சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவு பிறப்பித்து நீதிபதி விஜயகாந்த் தீர்ப்பு கூறினார். உத்தரவின் பேரில் சின்னசாமி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
26.06.2026 - 22:51:53
Privacy-Data & cookie usage: