பெரம்பலூரில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்!  மாவட்ட செயலாளர் குன்னம். சி. ராஜேந்திரன், மாவட்ட மாணவரணி  அமைப்பாளர் ஆர். முருகேசன் கூட்டறிக்கை!

schedule
2023-01-20 | 07:18h
update
2023-01-20 | 07:18h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

linguistic Martyrs Day Public Meeting in Perambalur!

பெரம்பலூரில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம்! மாவட்ட செயலாளர் குன்னம்.சி.ராஜேந்திரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஆர்.முருகேசன் கூட்டறிக்கை!

பெரம்பலூர், ஜனவரி ,21-

பெரம்பலூர் திமுக மாவட்ட கழகச் செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன்- மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஆர். முருகேசன் ஆகியோர் விடுத்துள்ள கூட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

Advertisement

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு தமிழ் மொழிக்காக தங்களது இன்னுயிரை தியாகம் செய்த தியாகிகளை போற்றிடும் வகையில் , கழக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் ஆனைக்கினங்க மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் பெரம்பலூர் மாவட்டத்தில் வருகின்ற (25-01-2023), புதன்கிழமை, மாலை 6.00 மணிக்கு பெரம்பலூர் தேரடித் திடலில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஆர்.முருகேசன் தலைமை வகிக்கிறார்.

மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் த.கருணாநிதி வரவேற்பு உரையாற்றுகிறார். மொழிப்போர் தியாகிகள் மூங்கில்பாடி ரெங்கராஜ், மாவட்ட மாணவரணி துனை அமைப்பாளர்கள் கு.க. அன்பழகன், பி.திருவரசன், சு.சதீஸ்,அ.தண்டபாணி , அ.மாது(எ) மருதமணி, சு.அருண்குமார்,எஸ்.சையத் சுல்தான்ஷா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

இதில், கழக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் -முன்னாள் ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம். எம்.பி. – தலைமை கழக பேச்சாளர் மதுரை குருசாமி – மாவட்ட கழகச் செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் – சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் ஆகியோர்கள் சிறப்புரையாற்றுகின்றனர். மாவட்ட மாணவரணி துனை அமைப்பாளர் எம். மணிவாசகம் நன்றியுரையாற்றுகிறார்.

இதில் மாநில, மாவட்ட ,ஒன்றிய ,நகர ,பேரூர் கழக நிர்வாகிகள் , அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துனை அமைப்பாளர்கள் , மகளிரணியினர், கழகத் தோழர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.08.2026 - 12:25:20
Privacy-Data & cookie usage: