Livestock breeders in Perambalur district affected by Foot-and-mouth disease

Model Photo

தமிழகத்தின் பால் தேவை பெருமளவு பெரம்பலூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த வகையில் நாள்ளொன்றுக்கு 2.50 லட்சம் லிட்டருக்கும் மேல் பால் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், இதற்காக மாவட்டம் முழுவதும் விவசாயிகள் பல ஆயிரம் கறவை மாடுகளை வளர்த்து வருகின்றனர். இந்த மாடுகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பால், உள்ளூர் தேவைக்கு போக, கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும், தனியார் பால் உற்பத்தி நிறுவனங்கள் மூலமாகவும் கொள்முதல் செய்யப்பட்டு பெருநகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இது மட்டுமின்றி பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் வெள்ளாடுகளையும், செம்மறி ஆடுகளையும் வேளாண்மையின் துணை தொழிலாக அதிக அளவில் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக கோமாரி நோய் தாக்கம் அதிகரித்து கால்நடைகளை அதிக அளவு தாக்கி வருகிறது.

வடகிழக்கு பருவ மழை தீவரமாக பெய்ததாலும், தொடர்ந்து பனி பொழிவும் அதிகரித்துள்ளதாலும் கோமாரி நோய்க்கான வைரஸ் கிரிமிகள் எளிதில் காற்று மூலமாக பரவி 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகளை தாக்கியுள்ளது. இதனால் கால்நடைகள் தீவனம் எடுத்துக்கொள்ளாமல், படுத்த படுக்கையாகி, பிறகு இறந்து போகிறது. இதனை தடுக்க கோமாரி நோய் தடுப்பூசி ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை கால்நடைகளுக்கு செலுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் தற்போது மாவட்டம் முழுவதும் கோமாரி நோய் தாக்கியுள்ள நிலையில், தடுப்பூசி இதுவரையில் மாவட்டத்திற்கு மத்திய மாநில அரசுகள் வழங்க வில்லை. தமிழகம் முழுவதும் சில மாவட்டங்களுக்கு மட்டுமே வழங்கியுள்ள நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் பெயரளவிற்கு கூட இந்த தடுப்பூசி இருப்பு இல்லை.

நோய்வாய்ப்பட்ட கால்நடைகளை அரசு கால்நடை மருத்தவமனைக்கு அழைத்துச்சென்றால், ஏதோ சில மருந்துகளை கொடுத்து விட்டு, தடுப்பூசி இல்லை என்று கூறிவிடுகின்றனர். மேலும் சீரகம், வெந்தயம், மிளகு மஞ்சள்தூள், பூண்டு, பனைவெல்லம் ஆகியவற்ற தேங்காய் துருவலுடன் சேர்த்து அரைத்து 3 வேளையும் வாயில் தடவி விட்டு, உள்ளுக்குள் கொடுக்குபடி கூறி விடுகின்றனர்.

சில இடங்களில் கோமாரி நோய் தாக்கிய மாடுகளை கால்நடைமருத்துவனைக்கு கொண்டு வந்தால், சிகிச்சைக்கு வரும் மற்ற கால்நடைகளுக்கும் பரவி விடும் என்று மருத்துவர்கள் அனுமதி மருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் கால்நடைகளின் உயிரிழப்பு அதிரித்துள்ளது. அதே நேரத்தில் இதற்கான தடுப்பூசிகள் தனியார் கால்நடைமருத்துவர்களிடம் போட்டுகொள்ள ஆயிரக்கணக்கில் செலவாகிறது.

கொரோனோ பெருந்தொற்றில் இருந்து தற்போதுதான் மெல்ல மெல்ல மீண்டு வந்துள்ள தங்களுக்கு வடகிழக்கு பருவமழையினால் விளைபொருட்கள் முற்றிலுமாக சேதமடைந்து, வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நிலையில், கோமாரி நோய் தாக்குதல் தங்களுக்கு அடிமேல் அடி கொடுத்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே, மத்திய மாநிலஅரசுகள் கோமாரி நோய்க்கான தடுப்பூசி மருந்துகளை உடனடியாக வழங்க வேண்டும், உயிரிழந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், மத்திய மாநில அரசுகள் ஒருவரையொருவர் குற்றம் சுமத்தாமல் விரைவாக கால்நடைகளை காப்பாற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனோ தோற்று பீதி அடங்குவதற்குள்ளாகவே வடகிழக்கு பருவமழை விவசாயிகளை வாழ்வாதாரத்தை பதம் பார்த்த நிலையில், தற்போது கோமாரி நோய் அவர்களை வீதிக்கு கொண்டு வந்துள்ளது.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for NEWS - Kalaimalar.

error: Content is protected !!